லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கணினி வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. 40 லட்ச ரூபாயைத் தொடும் இந்த உயர் ரக, அதிநவீன திறன் கொண்ட கணினியின் விலையைக் கேட்டு பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் தனது தகவல் சாதனங்களைச் செல்வந்தர்களுக்கு மட்டும் உருவாக்குவதாகப் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் நிறுவனமோ இந்த கருத்துகளுக்குச் சற்றும் செவி சாய்க்காமல், தங்கள் தகவல் சாதனங்களின் தரமும், திறனும் வேறெதையும் விட உயர்ந்த இடத்தில் இருக்கும் என்று மார்தட்டிக் கொள்கிறது.
Iphone11: புடைத்த மூன்று கேமராக்களை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் தந்து உயர் ரக கைப்பேசிகளைப் பயனர்களுக்காகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அந்த சமயத்தில் ஆப்பிள் கைப்பேசியின் வடிவமைப்பு குறித்து இணைய வாசிகள் சமூக வலைத்தளங்களில் பெரிய விவாத பொருளாக்கினர். இச்சூழலில் தற்போது ஆப்பிள் நிறுவனம் மேக் ப்ரோ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலையைக் கேட்டதும் பலருக்கும் மாரடைப்பே வந்துவிடலாம்.
ஆம் ரூ. 37 லட்சத்து 21 ஆயிரத்து 368 மட்டும் இருந்தால் இந்த மேக் ப்ரோ உங்களுக்குத் தான். அமெரிக்கச் சந்தைகளில் இந்த மேக் புக்கின் விலை 52,599 அமெரிக்க டாலர்கள் ஆகும். படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், வரைகலை நிபுணர்களுக்கு உதவும் வகையில் அதீத திறன் கொண்டதாக இந்த கணினி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காட்சிப்படுத்த்ப்பட்ட அதிநவீன ஆப்பிள் கணினியும், திரையும் ஆப்பிள் மேக் ப்ரோ சிறப்பம்சங்கள் (Apple top-end Mac Pro specifications)
- 3.5GHz 8‑core இண்டெல் சியோன் டபுல்யூ ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.
- டர்போ பூஸ்ட் 4.0 ஜிகா ஹெர்ட்ஸ் ஆற்றல் திறன்
- 32 ஜிபி டிடிஆர் 4 ஈ.சி.சி. ரேம்
- ராடெயோன் ப்ரோ 580 எக்ஸ் -உடன் கூடிய 8GB of GDDR5 கிராபிக்ஸ் மெமரி
- 256 ஜிபி எஸ்.எஸ்.டி சேமிப்புத் திறன்
மேஜிக் சுட்டி 2 (Magic Mouse 2), மேஜிக் விசைப்பலகை (Magic Keyboard), லைட்டினிங் கேபிள் ஆகியவற்றுடன் இந்த மேக் ப்ரோ வருகிறது.
ஐபோன்ல பட்டன் எங்கய்யா? - ட்ரம்ப் புலம்பல்
ஆனால் 6கே ரெசலியூசன் கொண்ட ப்ரோ எச்.டி.ஆர் திரையைத் தனியாகத் தான் வாங்க வேண்டும். அதன் விலை 4999 அமெரிக்க டாலர்கள் ஆகும். ஸ்டேண்ட்டின் விலை 1000 அமெரிக்க டாலர்கள் ஆகும். அடுத்த வாரம் முதல் இந்த மேக் ப்ரோ அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற டெஸ்லா வாகனத்தின் அறிமுக விலையைக் காட்டிலும் இந்த கணினியின் விலை அதிகம் என பலரும் கலாய்த்து கொள்கிறார்கள்.