தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

TVS iQube Electric : டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர்!

பெங்களூரு: எவ்வித சத்தமுமில்லாமல் தன் சத்தமில்லாத மின்சார இரு சக்கர வாகனத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இன்று பெங்களுரூவில் ரூ. 1.15 லட்சம் விலையில் இந்தியச் சாலைகளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

TVS Motor forays into electric two wheeler segment, TVS Motor launches e scooter, TVS Motor e scooter price, TVS iQube Electric, TVS iQube Electric features, business news, TVS iQube Electric,  டிவிஎஸ் ஐ க்யூப், எல்இடி முகப்பு விளக்குகள், டிவிஎஸ் ஐ க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர், டிவிஎஸ் மின்சார வாகனம்
டிவிஎஸ் ஐ-க்யூப்

By

Published : Jan 26, 2020, 6:07 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் மின்சார இரு சக்கர வாகனத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, உடன் டிவிஎஸ் உயர் அலுவலர்கள் பங்கேற்று டிவிஎஸ் மோட்டார்ஸின் முதல் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

Tata Altroz டாடா அல்ட்ரோஸ்: இந்தியர்களைப் பாதுகாக்க களமிறங்கிய இந்தியத் தயாரிப்பு!

டிவிஎஸ் ஐ-க்யூப் என்ற பெயரில் இந்தப் புதிய மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2010ஆம் ஆண்டு நடந்த வாகன கண்காட்சியில், ஐ-க்யூப் என்ற ஹைப்ரிட் ஸ்கூட்டர், கான்செப்ட் மாடலை டிவிஎஸ் காட்சிக்கு வைத்திருந்தது. ஆனால், அதற்கும் இப்போது வந்திருக்கும் ஸ்கூட்டரின் வடிவத்துக்கும், தொழில்நுட்ப அளவில் எந்த சம்பந்தமும் இல்லை.

டிவிஎஸ் ஐ-க்யூப் (முன்பக்கத் தோற்றம்)

டிவிஎஸ் ஐ-க்யூப் மின்சார ஸ்கூட்டர் வடிவம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் எல்இடி பகல்நேர விளக்குகள், அப்ரான் பகுதியில் எல்இடி ஹெட்லைட் க்ளெஸ்ட்டர் ஆகியவை அமைந்துள்ளன. பார்க்கவே அசத்தலாகக் காட்சியளிக்கிறது.

டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4kW திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார ஸ்கூட்டர் 0- 40 கி.மீ., வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 78 கி.மீ., வேகம் வரை செல்லும்.

சான்டிஸ்க் அசத்தல்: உலகின் மிகச்சிறிய 8டிபி பென் டிரைவ்!

ரைடிங் மோடுகள்

  1. ஈக்கோ மோடு (அதிகப்பட்ச பயண தூரத்தை வழங்கும்)
  2. பவர் மோடு (செயல்திறன் சற்றே அதிகரிக்கும் என்பதால், மின்கல சேமிப்புத் திறனும் குறையும்)

அம்சங்கள்:

  • எல்இடி முகப்பு விளக்குகள்
  • எல்இடி பகல்நேர விளக்குகள்
  • டெயில் விளக்குகள்
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளெஸ்ட்டர்
  • ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளும் வசதி
    டிவிஎஸ் ஐ-க்யூப் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளெஸ்ட்டர்

ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி:

இந்த ஸ்கூட்டரில் மொபைல் செயலி மூலமாக ஜியோ ஃபென்சிங் முறையில் ஸ்கூட்டர் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தி வைக்க முடியும். இது திருடு போவதிலிருந்து தவிர்க்க உதவும். நேவிகேஷன் வசதி, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுதல் முறை குறித்த தகவல்கள், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதிகளையும் பெற்றிருக்கிறது.

கடல் கடந்து செல்லும் இந்தியாவில் ஹிட் அடித்த மாருதியின் எஸ்-பிரஸ்ஸோ!

மொத்த விலை விபரம்:

முதல்கட்டமாக பெங்களூருவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய டிவிஎஸ் ஐ-க்யூப் மின்சார ஸ்கூட்டர் ரூ.1.15 லட்சம் என மொத்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்துடன் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆன்லைன் மூலமாகவும், குறிப்பிட்ட டிவிஎஸ் டீலர்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

டிவிஎஸ் ஐ-க்யூப் (பின்பக்கத் தோற்றம்)

என்று முதல் ஓட்டலாம்:

ஜனவரி 27ஆம் தேதி முதல் பெங்களூருவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். மாதத்திற்கு 1,000 ஐ-க்யூப் மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எனவே, பயனாளர்களுக்கு பதிவின் அடிப்படையில் ஸ்கூட்டரை வழங்குவதில் தொய்வு இருக்காது என்று கூறப்படுகிறது.

இதன் போட்டியாளர்கள்:

டிவிஎஸ் ஐ-க்யூப் மின்சார ஸ்கூட்டரின் அமைப்பு
  1. பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்
  2. ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டர்

இது நேரடி போட்டியாக இருக்கும். திறன், விலை ஆகியவற்றில் அதிக வித்தியாசங்கள் இல்லாத வகையில் இவை இருக்கிறது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details