டாக்கா: 2021ஆம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய Apache RTR 160 4V எனும் ப்ளூடூத் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் பைக் அறிமுகமாகவுள்ளது.
ஸ்மார்ட் பைக்கின் சிறப்பம்சங்கள்:
- ரேஸ் ஓட்டுபவர்களுக்கு ஏற்ற டெலிமெட்ரி வசதி
- ஒவ்வொரு திருப்பத்தின்போதும் திசைகாட்டும் வசதி
- அழைப்பு, குறுஞ்செய்தி வசதி
- எரிபொருள் குறையும்போது எச்சரிக்கை விடும் வசதி
- பைக் ரேஸர்களுக்கு ஏற்ற பகுப்பாய்வு வசதி என பல்வேறு வசதிகளை இந்த பைக் உள்ளடக்கியுள்ளது.
இதுகுறித்து வங்கதேச டிவிஎஸ் நிறுவன இயக்குநர் இம்ரான் உசேன், டிவிஎஸ் நிறுவனத்துடனான எங்கள் நீண்டநாள் தொடர்பில், டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் முதன்முதலாக எங்கள் நாட்டில் புதிய மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. பைக் ரேஸர்களுக்கு இந்த பைக் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்றார்.
ரேசிங் ரெட், மெட்டாலிக் ப்ளூ, க்னைட் ப்ளாக் என மூன்று நிறங்களில் இந்த பைக் அறிமுகமாகவுள்ளது. மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களை நீங்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணலாம்.
2021 TVS Apache RTR 160 4V with Bluetooth Enabled TVS SmartXonnect