தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சந்தையில் அறிமுகம்! - இன்னோவா க்ரிஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சந்தையில் அறிமுகம்

டெல்லி : டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

டொயோட்டா
டொயோட்டா

By

Published : Nov 24, 2020, 6:02 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகிவரும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகளில், இன்னோவா க்ரிஸ்ட்டாவுக்கு தனி இடம் உண்டு. வாடிக்கையாளர்கள் இன்னோவா பிராண்ட் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். முதன்முதலாக 2005ஆம் ஆண்டு இன்னோவா க்ரிஸ்ட்டா கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது கிடைத்த வரவேற்பு, இன்று வரை மாறாமல் உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் இந்தக் கார்களின் விற்பனையைக் கணக்கிட்டதில், தற்போது வரை எட்டு லட்சத்து 80 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

2016ஆம் ஆண்டு இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மேம்பட்ட மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காருக்கும் எதிர்பார்த்தைவிட அதிக அளவிலான வரவேற்பு கிடைத்தது. தற்போது வரை இரண்டாம் வெர்ஷன் இன்னோவா காரின் விற்பனை மூன்று லட்சம் யூனிட்களை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், தற்போது இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் மூன்றாம் வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள போட்டியின் காரணமாக, புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா நிறுவனம் உள்ளது. இந்தப் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விற்பனை விலை 16.26 லட்சம் முதல் 24.33 லட்சமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இது குறித்துப் பேசிய டி.கே.எம் விற்பனை மற்றும் சேவை மூத்த துணைத் தலைவர் நவீன் சோனி, "15 ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியம் எம்பிவி செக்டாரில் அறிமுகப்படுத்திய இன்னோவா க்ரிஸ்ட்டா வாகனத்தின் மேம்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தப் புதிய வாகனம், குடும்பத்துடன் அல்லது வணிகத் தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிக்கும்போது பாதுகாப்பு மற்றும் உறுதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details