தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இந்திய சாலைகளில் பாய வருகிறான் டெஸ்லா! - tesla car tamil

இந்திய வாகன பிரியர்களை வெகுவாக கவர்ந்துவைத்திருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 ரக கார் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஒரு முறை மின்னூட்டம் செய்தால், மாடல் 3 காரின் ஸ்டாண்டெர்டு பதிப்பு 423 கிலோ மீட்டரும், லாங் ரேஞ் பதிப்பு 568 கிமீ வரையும் செல்லும் என்கிறது டெஸ்லா நிறுவனம்.

Tesla India, Tesla Model 3, Tesla Model S, Model X, Tesla electric car, Tesla electric car price, electric vehicle, when we can buy tesla car in india, டெஸ்லா மாடல் 3, டெஸ்லா மாடல் எஸ், டெஸ்லா மாடல் எக்ஸ், டெஸ்லா மாடல் ஒய், tesla india launch, tesla arriving soon, மின்சார வாகன செய்திகள், இந்திய மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் கார், ஆட்டோமொபைல் செய்திகள், automobile news in tamil, tamil automobile news, car and bike news in tamil, upcoming cars tamil, tesla car tamil
Tesla India

By

Published : Jan 20, 2021, 8:41 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

டெல்லி: தனியார் இணையதளம் ஒன்று இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் முதல் டெஸ்லா மாடல் 3 காரின் விலையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, எலான் மஸ்க் தலைமையேற்று நடத்திவரும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, மின்சார வாகனங்களுக்கென தனது புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

திறன்மிகுந்த ஆராய்ச்சி துறையைக் கொண்ட டெஸ்லா

இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மிக பிரபலமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்திலிருந்து டெஸ்லாமாடல் 3, டெஸ்லா மாடல் எஸ், டெஸ்லா மாடல் எக்ஸ், டெஸ்லா மாடல் ஒய் ஆகிய நான்கு ரக கார்கள் பல விருப்பப் பதிப்புகளில் ஐரோப்பிய நாடுகளில் சாலைகளில் களமாடி வருகிறது.

டெஸ்லா மாடல் எஸ்

சொகுசான வசதிகள், ஒரு முறை மின்னூட்டம் செய்தால் அதிக தூரம் பயணம் மேற்கொள்ளும் வசதி ஆகியன டெஸ்லாநிறுவன கார்களின் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த இந்தியாவில் தங்கள் கார்களின் விற்பனை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கால்பதிப்பு

அதன்படி இந்தியாவில் முதலாக தங்கள் நிறுவனத்தில் டெஸ்லாமாடல் 3 ரக கார்களை களமிறக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரீமியம் ரக கார்களான மாடல் எஸ், மாடல் எக்ஸ் ஆகிய கார்களை சந்தைப்படுத்த டெஸ்லா நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

டெஸ்லா மாடல் எக்ஸ்

டெஸ்லா மாடல் 3

முதலாவதாக வெளியிடப்படும் டெஸ்லாமாடல் 3 காரின் விலை ஏறக்குறைய 60 லட்ச ரூபாய்க்கு இந்திய சாலைகளில் கால்பதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு தடவை மின்னூட்டம் செய்தால், இதன் ஸ்டாண்டெர்டு பதிப்பு 423 கிமீ வரையும், லாங்கு ரேஞ்ச் 568 கிமீ வரையும் செல்லும். விரைவாக மின்னூட்டும் வசதி, குறைந்த பராமரிப்பு, சொகுசான உள்கட்டமைப்பு என காரின் சிறப்பம்சங்கள் ஏராளம் உள்ளது.

டெஸ்லா மாடல் 3 தோற்றம்

டெஸ்லா மாடல் 3 முன்பக்க பார்வை (நன்றி: டெஸ்லா இணையதளம்)
டெஸ்லா மாடல் 3 பக்கவாட்டு பார்வை (நன்றி: டெஸ்லா இணையதளம்)
டெஸ்லா மாடல் 3 உள்புற அமைப்பு (நன்றி: டெஸ்லா இணையதளம்)

தொடர்ந்து படையெடுக்கும் டெஸ்லா

ஜூலை 2021இல், டெஸ்லாமாடல் எஸ் ரகம் ரூ.1.50 கோடிக்கும், ஜனவரி 2022 டெஸ்லா மாடல் எக்ஸ் ரூ.2 கோடிக்கும், ஜனவரி 2023இல் டெஸ்லா மாடல் ஒய் ரூ.50 லட்சத்துக்கும் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் ஒய்
Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details