தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

#TataSumoNoMore: மாஸ் வில்லன்களின் பிரதான வண்டிக்கு விடைகொடுத்த டாடா! - Stopped production in india

இந்திய மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற டாடா சுமோ காரின் தயாரிப்பை டாடா நிறுவனம் நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TataSumoNoMore

By

Published : Sep 18, 2019, 10:51 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

டாடா சுமோ என்ற ஒற்றை வண்டி அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இடம்பெறக் காரணம் அதன் தோற்றமும், பராமரிப்பு செலவும்தான். அம்பாஸிடர் கார்களுக்கு இணையாக 90களில் மக்கள் அதிகம் பயன்படுத்திய, விரும்பிய வாகனம் டாடா சுமோ. 1994ஆம் ஆண்டு இந்தியர்களுக்காகத் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கிய சுமோ வண்டி இன்றுவரை எந்த சலிப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதீத வசதிகளுடன் வெளியாகிறது ரெனால்ட் ட்ரைபர்

இந்திய திரைப்படங்களில் மாஸ் வில்லன்களின் பிரதான வண்டியாக டாடா சுமோ இருந்துவந்தது. அன்றைய காலங்களில் எக்ஸ்யுவி ரகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்திய வண்டி சுமோதான்.

தற்போது இந்த வண்டியின் உற்பத்தியை டாடா நிறுவனம் நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது வாகன பிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான காரணத்தை அலசும்போது, வண்டியின் பாதுகாப்பு அம்சங்கள் அதற்கான தர இலக்கை அடையவில்லை என்பதும், இந்த வாகன பாதுகாப்பிற்குத் தேவையான அம்சங்களைச் செயல்படுத்தும்போது வாகனத்தின் விலை பயனர்களின் எதிர்பார்ப்பைத் தாண்டி சென்றுவிடும் என்பது தெரியவருகிறது என பலர் கூறுகின்றனர். மேலும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுவன தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details