தமிழ்நாடு

tamil nadu

Tata Altroz டாடா அல்ட்ரோஸ்: இந்தியர்களைப் பாதுகாக்க களமிறங்கிய இந்தியத் தயாரிப்பு!

By

Published : Jan 25, 2020, 5:20 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா தனது புதிய பாய்ச்சலை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. அதன்படி புதிய ரகத்தின் பாதுகாப்பு அம்சத்தில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

Tata Motors premium hatchback segment, Tata Motors rolls out Altroz, Altroz price, Altroz features, business news in tamil, டாடா அல்ட்ரோஸ், டாடா ஹாட்ச்பேக் அல்ட்ரோஸ்
டாடா ஹாட்ச்பேக் அல்ட்ரோஸ்

மும்பை: டாடா மோட்டார்ஸ் தனது உயர்தர ஹேட்ச்பேக் ரக டாடா அல்ட்ரோஸ் காரை 5.29 லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலை மதிப்பில் சந்தைக்கு கொண்டுவந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம்செய்யப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்தக் கார் என்சிஏபி (NCAP) எனும் விபத்து பாதுகாப்புச் சோதனையில் ஐந்து நட்சத்திர (5*)மதிப்பீட்டை பெற்ற முதல் குறைந்த விலை வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்து செல்லும் இந்தியாவில் ஹிட் அடித்த மாருதியின் எஸ்-பிரஸ்ஸோ!

டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா தளத்தில் உருவாகியிருக்கும் முதல் வாகனமாக அல்ட்ரோஸ் கார் இருக்கிறது. மேலும் இந்த உயர்தர ஹேட்ச்பேக் ரகம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2 வடிவமைப்பில் உருவாகியிருக்கிறது.

டாடா ஹேட்ச்பேக் அல்ட்ரோஸ்

புதிய அல்ட்ரோஸ் காரின் மேம்பட்ட வசதிகள்

  • எல்.இ.டி. பகல் நேர விளக்குகள்
  • எல்.இ.டி. பின்புற (டெயில்) விளக்குகள்
  • 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்
  • செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • ஏழு இன்ச் அளவில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • ஆப்பிள் கார் பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி

டாடா அல்ட்ரோஸ் கார் செயல்திறன்

  • 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் இன்ஜின் / 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின்
  • பெட்ரோல் இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர் /113 என்.எம். டார்க்
  • டீசல் இன்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க்
  • 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
  • பாதுகாப்பிற்கென புதிய காரில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., கார்னெர் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல்
  • முன்புறம் இரண்டு காற்றுப்பைகள்
  • பின்புறம் பார்க்கிங் உணர்விகள் (சென்சார்)
  • தானியங்கி முகப்பு விளக்குகள்
  • குரூயிஸ் கன்ட்ரோல்
  • அதிவேக சமிக்ஞை (சிக்னல்) சிஸ்டம்

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்' சென்னையில் அறிமுகம்!

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் காரின் ரகங்கள்

  1. எக்ஸ்.இ.
  2. எக்ஸ்.எம்.
  3. எக்ஸ்.டி.
  4. எக்ஸ்.இசட்
  5. எக்ஸ்.இசட். (ஒ)

இதன் உயர் மட்ட ரகத்தின் விலையானது ரூ. 9.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தக் காருக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details