தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

இன்னோவா கிரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் முன்பதிவு தொடக்கம்!

டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா பிஎஸ்-6 (BS-6) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

Toyota Innova Crysta
Toyota Innova Crysta BS6

By

Published : Jan 7, 2020, 12:34 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

இந்தியாவின் எம்.பி.வி. (MPV) கார் ரகத்தில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா தன்னிகரில்லா மாடலாக விளங்கிவருகிறது. இந்த நிலையில், புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகராக டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார் மேம்படுத்தப்பட்டு நேற்றுமுதல் இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா கார், டூரிங் ஸ்போர்ட் ஆகிய மாடல்களின் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கான விலையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல்களுக்கு ரூ.15.36 லட்சம் முதல் ரூ.24.06 லட்சம் வரையில் (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடலின் விலை ரூ.23,000 வரையிலும், டீசல் மாடல்களின் விலை ரூ.1.43 லட்சம் வரையிலும் அதிகரித்திருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலையாகவும், முதலில் முன்பதிவு செய்யும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விலை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் மீண்டும் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிஸ்ட்டா பிஎஸ்-6 எஞ்சின்

இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எமெர்ஜென்ஸி பிரேக் சிக்னல் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கிறது.

பிஎஸ்-6 மாடல்களின் டெலிவிரி பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில், பிஎஸ்-6 எரிபொருள் விநியோகம் தொடங்கப்படும் நகரங்களில் இந்த புதிய பிஎஸ்-6 இன்னோவா கிரிஸ்ட்டா டெலிவிரி பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க ஹிந்துஜா குழுமம் தயார்?

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details