தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

மாருதி சுசுகி 2020இல் டீசல் கார் விற்பனையை நிறுத்த முடிவு - #Maruti Suzuki

டெல்லி: மாருதி சுசுகி நிறுவனம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தனது டீசர் கார் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

Maruti Suzuki

By

Published : Apr 26, 2019, 11:47 AM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தனது டீசல் கார் விற்பனையை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் முதல் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

டீசல் வாகனங்கள் ஏன் நிறுத்தம்?

  • டீசலானது பெட்ரோல் இன்ஜினை விட அதிகளவு மாசை ஏற்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அதிகளவு பாதிக்கிறது.
  • பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாதது, வாடிக்கையாளர்களிடையே டீசல் கார் மீதான ஈர்ப்பு குறைந்தது.
  • டீசல் வாகனம் நிறுத்தத்திற்கு மிக முக்கியக் காரணம், BS-VI விதிமுறைகள் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருவதே. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு டீசல் இன்ஜின் தயாரிக்கும்போது செலவு அதிகரிக்கும்.

இதேபோல் சூப்பர் கேரி வாகனமும் நிறுத்தப்படுவதாக ஏற்கனவே மாருதி சுசுகி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details