தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

திருவிழா காலத்தின் ‘மாருதி ஸ்விஃப்ட்’ சிறப்புப் பதிப்பு - tamil auto news

மாருதி சுசூகி இந்தியா தனது ஸ்விஃப்ட் ரக காரின் பிரத்யேக விழா கால பதிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரண காரைவிட இதன் விலை ரூ. 24,999 வரை கூடுதலாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maruti Suzuki  Swift
Maruti Suzuki Swift

By

Published : Oct 19, 2020, 6:30 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

டெல்லி: நாட்டின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, ஸ்விஃப்ட் ரக காரின் விழா காலப்பதிப்பை வெளியிட்டுள்ளது.

சாதாரண ஸ்விஃப்ட் காரின் டெல்லி விற்பனையகத்தின் விலை ரூ.5.19 லட்சம் முதல் ரூ.8.02 லட்சமாக இருக்கிறது. அதனைவிட இந்தச் சிறப்பு பதிப்பின் விலை 24 ஆயிரத்து 999 ரூபாய் வரை அதிகரிக்கும் என நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிறப்புப் பதிப்பு, ஒரு கருப்பு தோரணையுடன் வருகிறது. இது பளபளப்பான கருப்பு உடல் கிட், ஸ்பாய்லர், பாடி சைட் மோல்டிங், கதவு வைசர், மூடுபனி விளக்கு போன்ற கூடுதல் சிறப்பு பொருத்தங்களைக் கொண்டுவருகிறது.

இதுவரையில் 23 லட்சம் பேர், புதிய ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ளதாக நிறுவன தரவுகள் குறிப்பிடுகின்றன.

Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details