தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

நாட்டின் முதல் தானியங்கி காரை வடிவமைத்த எம்.ஐ.டி மாணவர்கள்

ஓட்டுநர் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் நாட்டின் முதல் தானியங்கி நான்கு சக்கர வாகனத்தை எம்.ஐ.டி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இறுதியாண்டு இயந்திர பொறியியல் மாணவர்களால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Indias first driverless car
Indias first driverless car

By

Published : Aug 12, 2021, 3:44 PM IST

புனே (மகாராஷ்டிரா):எம்.ஐ.டியில் இறுதியாண்டு இயந்திர பொறியியல் பயிலும் மாணவர்கள், தானியங்கி நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த வாகனத்தின் செயல்முறை விளக்கத்தை, எம்.ஐ.டி. மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வைத்து பேராசிரியர்களுக்குச் செய்து காட்டினர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தானியங்கி கார் என்ற பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது.

இந்தத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் யாஷ் கேஸ்கர், சுதன்ஷு மனேரிகர், செளரப் டாமக்லே, சுபாங் குல்கர்னி, ப்ரத்யாக்ஷா பாண்டே, பிரேர்னா கோலிபகா ஆகியோர் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள், இறப்புகளைக் குறைக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் கொண்டு இந்த காரைத் தயாரித்ததாகக் கூறினர்.

லித்தியம் ஐயன் பேட்டரி, 3 கிலோ வாட் திறன் கொண்ட பிஎல்டிசி பிரஷ்லெஸ் மோட்டார் கொண்டு இந்த வாகனம் இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் வரை இதனை செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த வாகனத்தை புனே ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ நிர்வாக அலுவலர்கள் பரிசோதித்த பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இதனை உருவாக்கிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details