தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

தொடங்கிய ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா-2020 காரின் முன்பதிவு - Hyundai Verna prize

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான வெர்னா-2020 காருக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

Hyundai Verna prize
Hyundai Verna 2020 booking

By

Published : Mar 13, 2020, 9:13 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ஹூண்டாய் மோட்டார் இந்தியா வெர்னா 2020 காருக்கான முன்பதிவை வரும் 26ஆம் தேதி, இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த காருக்கான முன்பதிவு ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலமாகவோ அல்லது ஹூண்டாய் டீலர்ஷிப்பிலோ ரூ.25,000 முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும், டீசல் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டார்க் கன்வெர்ட்டர் வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

வெர்னா 2020 காரில் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்துடன் நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக செயல்படும், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி (BlueLink connectivity) செயலியும் கொடுக்கப்பட உள்ளது.

இந்த புளூ லிங்க் கனெக்ட்டிவிட்டி செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோன் மூலமாக ரிமோட் கன்ட்ரோல் முறையில், கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது, ஏ.சி.யை முன்கூட்டியே ஆன் செய்வது, கார் இருப்பிடத்தைக் கண்டறிவது, நேவிகேஷன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பெற முடியும். கார் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்லாதவாறு கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

2020 ஹூண்டாய் வெர்னாவின் போட்டியாளர்களில் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வெண்டோ ஆகியவை அடங்கும். வெர்னாவின் விலை ரூ.8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ. 14.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க:புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details