பிரபல இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமானஹார்லி-டேவிட்சன், தனது லைவ்ஒயர் (LiveWire Electric 2020) மின்சார இருசக்கர வாகன உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறுதி தர சோதனையின்போது வாகனத்தில் தரமற்ற நிலையை நாங்கள் சமீபத்தில் கண்டுபிடித்ததால் உற்பத்தியையும் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட லைவ்ஒயர், வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் சுமார் 30,000 அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் 21 லட்சம் ரூபாய்) விற்கப்பட்டது.