உலகப் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம், புதிதாக பிஎம்டபிள்யூ ஐ4 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இது ஓர் செடான் ரக மின்சார வாகனம் ஆகும். இந்தக் காரின் புகைப்படம் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரும் வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாகனத்தின் வடிவமைப்பு, வாகன பிரியர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது.
இந்தக் கார் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 482 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்தக் கார் வெறும் நான்கு நொடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை அடைந்துவிடுகிறது. பிஎம்டபிள்யூ ஐ4 மின்சார கார் மூன்றுவித மாடல்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இடிரைவ் 35, இடிரைவ்40, எம்50 ஆகிய மூன்று தேர்வுகளில் கார் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளது.