வரையறுக்கப்பட்ட பதிப்பான மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹாட்ச், ஜி.பி விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, முற்றிலும் திறன்பட கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெறும் 15 கார்கள் மட்டும்தான் இந்த பதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ETV Bharat / science-and-technology
மொத்தம் 15 கார்கள்தான்! மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹாட்ச் அறிமுகம்! - ஜெர்மன் சொகுசு கார்
டெல்லி: ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, தனது வரையறுக்கப்பட்ட பதிப்பான மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹாட்ச் காரை ரூ. 46.9 லட்சம் (விற்பனை அங்காடி விலை) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், அவை shop.mini.in என்ற இணையதளத்தில் பிரத்யேகமாக முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காரை தங்கள் வசப்படுத்திக்கொள்ளலாம் என பிஎம்டபிள்யூ இந்தியா கூறியுள்ளது. “மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் எப்போதுமே ஒரு தனித்துவமான பாரம்பரியம், தனித்தன்மை, செயல்திறன் கொண்ட கார்” என பி.எம்.டபிள்யூ குழும இந்தியத் தலைவர் விக்ரம் பாவா அதன் வெளியீட்டு நிகழ்வில் கூறியுள்ளார்.
மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹாட்ச் 2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 6.1 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடியதாகும்.