தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! - Electric scooter

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு என தனித்துவமான அர்பனைட் பிராண்டை பஜாஜ் உருவாக்கவுள்ளது. ஏத்தர், ஒகினாவா, 22 கிம்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்களுக்கு இந்த ஸ்கூட்டர் போட்டியாக அமையும்.

chetak chic electric scooter

By

Published : Oct 12, 2019, 1:12 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 'சேட்டக் சிக் எலெக்ட்ரிக்' (Chetak Chic Electric) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கென தனித்துவமான அர்பனைட் பிராண்டை இந்நிறுவனம் உருவாக்கவுள்ளது.

இந்த ஸ்கூட்டர் ஏத்தர், ஒகினாவா, 22 கிம்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்களுக்கு போட்டியாக அமையும். புனேவை தலைமையிடமாகக் கொண்ட மின்சாரத்தால் இயங்கும் முதல் ஸ்கூட்டர் இதுவாகும்.

அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அயோக் தலைவர் அமிதாப் கண்ட் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்படவுள்ளது.

Bajaj Chetak scooter

குறிப்பாக இந்த ஸ்கூட்டர் சென்னை, பெங்களூருவில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்ற ஏத்தர் 450, ஒகினாவா பிரைஸ் ப்ரோ மாடலுக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தலாம்.

இந்த மாடலின் நுட்ப விவரக்குறிப்புகள் தற்பொழுதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும் சில சோதனை ஓட்டப் படங்களின் மூலம் கிடைத்த தகவலின்படி, வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், ஸ்டெப்டு இருக்கை கொண்டதாகவும் இந்த ஸ்கூட்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் பாஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுகின்றது.

Bajaj Chetak Chic electric scooter

மேலும் இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மாடலாகவும் வெளியாகலாம் என சில உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பஜாஜின் அர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு தொடங்க வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: குப்பைகளை சேகரிக்க பேட்டரி ஆட்டோக்கள் - கலக்கும் கள்ளக்குறிச்சி நகராட்சி

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details