தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம் - Bajaj Dominar 250 Mileage

"டொமினார் 250 பைக், சவாரி ஆர்வலர்களுக்கு ஏற்ற பைக்காக இருக்கும்” என்று பஜாஜ் ஆட்டோ தலைவர் சாரங் கனடே கூறியுள்ளார்.

Dominar Sports Tourer
Bajaj Dominar 250

By

Published : Mar 11, 2020, 6:54 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

டொமினார் 250 சிசி பைக்கின் டொமினார் ஸ்போர்ட்ஸ் டூரர் (Dominar Sports Tourer) மாடலை பஜாஜ் ஆட்டோ புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ .1.6 லட்சம் ஆகும்.

”நீண்ட தூர பயணிகளுக்கும், பைக் சவாரி ஆர்வலர்களுக்கும் ஏற்ற பைக்காக டொமினார் 250 இருக்கும்” என்று பஜாஜ் ஆட்டோ தலைவர் சாரங் கனடே கூறியுள்ளார்.

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் எஞ்சின் 248 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விடு கூல்டு எஞ்சின் உள்ளது. இது 25 பிஎச்பி பவர் மற்றும் 23.5 என்.எம் டார்க் திறனை அதிகபட்சமாக வழங்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் பிஎஸ்-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் டியூக் 250 பைக்கிலும் இதே எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் அதிக மாற்றங்கள் இல்லை. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்பிளிட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

டொமினார் 250 இப்போது அனைத்து பஜாஜ் ஆட்டோ டீலர் ஷிப்களிலும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்டில் கிடைக்கிறது என்று பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ரயில்வே பயணிகள் பாதுகாப்பாக உள்ளார்களா?

Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details