தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

ஆப்பிள் iOS 15.4 அப்டேட்... வேகமாக குறையும் பேட்டரி... பயனர்கள் கவலை... - iPhone users face battery drain

ஆப்பிள் iOS 15.4 அப்டேட்டுக்கு பிறகு பேட்டரி விரைவில் குறைவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் பேட்டரி 6 மணி நேரம் மட்டுமே நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

apple-ios-15-dot-4-update-may-be-causing-battery-drain
apple-ios-15-dot-4-update-may-be-causing-battery-drain

By

Published : Mar 21, 2022, 1:04 PM IST

Updated : Apr 25, 2022, 5:27 PM IST

ஆப்பிள் நிறுவனம் மார்ச் 14ஆம் தேதி iPadOS 15.4, watchOS 8.5, macOS Monterey 12.3, tvOS 15.4, HomePod ஆகிய மென்பொருளுடன் iOS 15.4 என்னும் அப்டேட்டை வெளியிட்டது. இந்த அப்டேட்டுக்கு பிறகு ஐபோன் பயனர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்துவருகின்றனர்.

இதில் பெரும் சர்ச்சையை கிளப்பியது, போனில் பேட்டரி திறன் குறைந்து வருவதுதான். குறிப்பாக ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் பயனர்கள் அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே பேட்டரி தாங்குவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சிலர் வெறும் பத்து நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் குறைந்துவிடுவதாக கூறி ஆப்பிள் நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றனர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் இதுவரை பதில் அளிக்காமல் இருந்துவருகிறது.

iOS 15.4 அப்டேட்டில் முகக் கவசம் போட்டபடியே ஃபேஸ் (Face) ஐடியை பயன்படுத்தி அன்லாக் செய்வது. கூடுதல் எம்ஓஜி வசதி உள்பட நூற்றுக்கணக்கான புதிய அம்சங்கள் அறிமுகமாகியது. பொதுவாகவே ஐபோன் பேட்டரி திறன் ஆண்டிராய்டு அளவை விட குறைவான இருக்கும். ஏனென்றால் ஐபோனின் மெல்லிய வடிவமைப்புக்கு ஏற்றவாறு பேட்டரி திறன் கொடுக்கப்பட்டிருக்கும்.

எந்த மாடல்களில் iOS 15.4 அப்டேட்

ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எஸ்ஆர், ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ்.

இதையும் படிங்க:உக்ரைன் போர்: மனிதநேய செயல்பாடுகளுக்கு 15 மில்லியன் டாலர் அளிக்கும் 'மெட்டா'

Last Updated : Apr 25, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details