தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

தேவையில்லாத சத்தங்கள் கேட்காது: ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன்! - indian brand wireless earphones

தண்ணீர் புகா பாதுகாப்பு, 12 மணி நேரம் இசையை ரசிக்கும்படியான மின்கல சேமிப்புத் திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் உள்நாட்டு நிறுவனமான ஜீப்ரானிக்ஸ், ஜீப் மாங்க் எனும் வயர்லெஸ் இயர்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன், Zeb-Monk  wireless neckband earphone
ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன்

By

Published : Aug 7, 2020, 5:14 PM IST

Updated : Feb 16, 2021, 7:52 PM IST

டெல்லி: தொழில்நுட்ப தகவல் சாதனங்கள் வடிவமைக்கும் இந்திய நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் தனது புதிய ஜீப்-மாங்க் எனும் வயர்லெஸ் இயர்ஃபோனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

சுற்றுபுற ஒலிகளை நேர்த்தியுடன் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை இந்த தகவல் சாதனத்தில் உட்புகுத்தியிருப்பதாக கூறியிருக்கும் நிறுவனம், அதற்கான பொத்தானையும் தனித்தன்மையுடன் வழங்கியுள்ளது. இயர்ஃபோன்களுக்கு பெரும் போட்டியாளர்கள் மிகுந்த இந்திய சந்தையில் ஜீப்-மாங்க் தகவல் சாதனத்தின் விலையை ரூ.3560 என்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

மிளிர்ந்தெழும் இந்திய கைபேசி நிறுவனம்: அதிரடி விலையில் லாவா Z66 களமாட வருகிறது

12 மணி நேரம் பயனர்கள் இதன் மூலம் இசையை ரசிக்க முடியும். ‘ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்’ உதவியுடன் இதனை பயன்படுத்தினால் 10 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும். சந்தையில் உள்ள வயர்லெஸ் இயர்ஃபோன்ஸ் போட்டிக்கு இடையில் இது தரமான மின்கல சேமிப்பை வழங்குகிறது.

ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன்

மேலும், தண்ணீர் உட்புகா பாதுகாப்பு, 12mm நியோடைமியம் காந்த இயக்கி, ஸ்மார்ட் பயன்பாடுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட், அமேசான் அலெக்சா போன்ற கைபேசி உதவியாளரையுன் இதன் மூலம் அணுக முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன் சிறப்பன்சங்கள்
Last Updated : Feb 16, 2021, 7:52 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details