வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் பெரும் மாற்றம் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர்கணித்துள்ளனர்.
கரோனா நோய்த் தொற்று போன்ற காலங்களில், நோயாளிகளை மருத்துவர்கள் எளிதில் அணுகமுடியாத சூழல் ஏற்பட்டால் செயற்கை நுண்ணறிவு நமக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மறுஆய்வையும், பரிந்துரைகளையும் கொலம்பியா பல்கலைக்கழக மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-இன், ஹெயில்ப்ரூன் மக்கள் தொகை மற்றும் குடும்ப சுகாதாரத் துறையின் இணை பேராசிரியர் நினா ஸ்வால்பே சில ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பெரும் தொற்று ஏற்படும் வேளையில், அனைத்தையும் எளிதில் கையாள முடியும். இதனை உறுதிசெய்வதற்கு பெரும் முதலீடுகள்வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.