தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

புதிய ஜாப்ரா எவால்வ்2 ஹெட்செட் வகைகள்... விலை ரூ.15,831 முதல் - latest tech news in tamil

ஜாப்ரா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை படைப்புகளான எவால்வ்2 ரக காதணி இசைக்கருவிகளை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. எவால்வ்2 85, எவால்வ்2 65, எவால்வ்2 40 ஆகிய மூன்று ரகங்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. பயனாளிகளுக்கு மே மாதம் முதல் இவைகள் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jabra launches new headsets india
Jabra launches new headsets india

By

Published : Apr 21, 2020, 1:45 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

டென்மார்க்கைச் சேர்ந்த ஜாப்ரா, ஜி.என். நெட்காமின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் காதணி இசைக் கருவிகள் தயாரிப்பதில் மேம்பட்ட நிறுவனமாகும். மேலும், பயனாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஜாப்ரா, தற்போது புதிய உயர் தொழிற்நுட்பம் கொண்ட எவால்வ்2 பதிப்புகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

எவால்வ்2 85, எவால்வ்2 65, எவால்வ்2 40 ஆகிய மூன்று ரகங்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. இதன் தொடக்க விலை 15ஆயிரத்து 831 ரூபாய் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் தங்களின் பிரத்யேக கடைகளில் பயனாளிகள் இதனை வாங்கிக் கொள்ளலாம் என்று ஜாப்ரா அறிவித்துள்ளது.

தொலைக்காட்சி மட்டுமல்ல; இனி இதையும் தருவோம்! - சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சி

சிறப்பம்சங்கள்

  • எவால்வ்2 85, எவால்வ்2 65 ஆகியன கறுப்பு, பழுப்பு ஆகிய இரு நிறங்களில் கிடைக்கும்
  • எவால்வ்2 40 கறுப்பு நிறத்தில் மட்டுமே வெளிவரும்
  • எவால்வ்2 85 டிஜிட்டல் ஹைப்ரிட் ஏ.என்.சி தொழிற்நுட்பத்துடன் 10 ஒலி வாங்கிகள் (MICROPHONES) இருக்கும். அதில் 8 காது பகுதியிலும், 2 வாய்க்கு நேராகவும் அமைந்திருக்கும். மேலும், 37 மணிநேரம் மின்கலத் திறன் கொண்டத
  • எவால்வ்2 65, மூன்று ஒலிவாங்கிகளைக் கொண்டுள்ளது. எவால்வ்2 85 போல 37 மணிநேரம் மின்கலத் திறன் கொண்டது
  • எவால்வ்2 40, அனைத்து பயனாளர்களுக்கும் பொருந்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details