தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / science-and-technology

ஆன்லைன் வகுப்பில் மாணவனுக்கு நேர்ந்த விரீதம்... செல்போன் வெடிக்காமல் தவிர்ப்பது எப்படி... - ஸ்மார்ட்போன் வெடித்து மாணவர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆன்லைன் வகுப்பின்போது வெடித்த செல்போனால் 8ஆம் வகுப்பு மாணவன் உயிருக்கு போராடி வருகிறான். இந்த நிலையில், செல்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

how to avoid phone exploding
how to avoid phone exploding

By

Published : Dec 17, 2021, 3:27 PM IST

போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் ஆன்லைன் வகுப்பில், ராம்பிரகாஷ் என்னும் 8ஆம் வகுப்பு படிக்கும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் திடீரென வெடித்து சிதறியது.

இதில் மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இதேபோல் உலகம் முழுவதும் அடிக்கடி பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே போன் வெடிக்காமல் தவிர்ப்பதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

போனுக்கான சார்ஜர்:

செல்போன்களில் வெடிக்கக்கூடியது பேட்டரி மட்டுமே. இதனால்தான் ஆபத்தே. இதற்கு முக்கிய காரணம் போனுக்கான சார்ஜரை பயன்படுத்தாமல், வேறு செல்போன் சார்ஜர்களை பயன்படுத்துவதாகும். ஒவ்வொரு போனும் தனிப்பட்ட பேட்டரி திறனுடன் தயாரிக்கப்படுகின்றன. எனவே விபத்தை தவிர்க்க உங்களுடைய போனுக்கான சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள்.

தரமற்ற சார்ஜர்

ஒரு போனின் ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது, பேட்டரியின் வெப்பநிலை சீராக இருக்கும். ஆனால், குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு, அதிக வோல்ட் கொண்ட சார்ஜர் அல்லது குறைந்த விலையில் கிடைக்கூடிய தரமற்ற சார்ஜர் பயன்படுத்தினால் வெப்பம் அதிகரிக்கும் . இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே தரமற்ற மலிவு விலை சார்ஜரை தவிர்ப்பது நல்லது.

நீண்ட நேரம் சார்ஜ் போடுவது

பொதுவாக சில மணி நேரங்கள் மட்டுமே போனுக்கு சார்ஜ் போடவேண்டும். தற்போது விற்பனையாகும் போன்கள் அரை மணி முதல் ஒரு மணி நேரத்திலேயே முழு சார்ஜ் ஆகிவிடுகின்றன. இந்த நேரம் பழைய போன்களில் மாறுபடலாம். பொதுவாக அனைத்து போன்களிலும் 2 முதல் 4 மணி நேரங்கள் மட்டுமே சார்ஜ் போட வேண்டும்.

ஆனால், பலர் இரவு தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு காலை வரை எடுப்பதில்லை. இந்த நேரத்தில் பேட்டரி அதிக வெப்பம் அடைந்து வெடிக்ககூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே சார்ஜ் போடும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சார்ஜ் போட்டு பேசுவது:

சார்ஜ் போட்டு பேசினால் போன் வெடிக்கும். சார்ஜ் போட்டு அழைப்புகளை பேசுவதால், செல்போனிற்கு கூடுதல் சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவில் மாறுதல் ஏற்படுகின்றது. இதன்மூலம் பேட்டரி வெப்பமடைந்து வெடிக்கிறது. எனவே சார்ஜ் போட்டு பேசுவதை தவிருங்கள்.

இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்பின் போது வெடித்த போன்... 8ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்...

ABOUT THE AUTHOR

...view details