தமிழ்நாடு

tamil nadu

ரூ.5000-க்குள் அசத்தலான 5 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!

By

Published : Dec 29, 2020, 6:19 AM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

இந்திய தகவல் சாதன பயனர் சந்தையில் 2020ஆம் ஆண்டு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ். மிகவும் எளிதில் கையாளக் கூடிய இந்த ஒலி வெளியிடும் தகவல் சாதனங்களில் ரூ.5000-க்கும் குறைவான தரமிகுந்தவை எவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

5 affordable true wireless earbuds, OnePlus Buds, Boat Airdopes 461 TWS, Xiaomi Mi True Wireless Earphones 2C, Realme Buds Air Pro Master Edition, JBL Tune 225TWS, 2021 earbuds, tech news, gadgets, best earbuds under 5000 rs, best tws earbuds under 5000 rs, best bluetooth tws under 5000 rs, best wireless earphone under 5000 rs, டெக் செய்திகள், tech news in tamil, tamil tech news, latest tech news, best bluetooth earbuds, best bluetooth earpods, best bluetooth tws, best bluetooth earbuds under 5000rs, ரூ 5000 சிறந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், top 5 earbuds
அசத்தலான 5 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

டெல்லி: இந்தியாவின் தகவல் சாதன சந்தையில் ரூ.5000-க்கும் கீழுள்ள ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸில் 5 சிறந்தவை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தகவல் சாதன சந்தை தற்போது வெகுவாக மாறிவருகிறது. ஆம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், வயர்களிலிருந்து மக்கள் மனநிலை மாறி, வயர்லெஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பற்றிக் கொண்டது. இதற்கு அடுத்தப்படியாக வயர்லெஸிலும் சிறிது மாறுதல்களுடன் கூடிய சிறிய அளவிலான ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியானது.

முதலில், இது காது கேட்காதவர்கள் அணியும் கருவி போன்றுள்ளது என்று மக்கள் நகையாடினாலும், அவர்களே இதற்கு அடிமையாக்கப்பட்டது தொழில்நுட்ப வளர்ச்சியின் புரட்சி என்றே பார்க்கமுடிகிறது. இதனைக் காதுகளில் அணிந்துகொண்டு மக்கள் இசையை ரசிக்கும்போது, சுற்றுப்புறத்தில் நடப்பதை அப்படியே மறந்துவிடுகின்றனர் என்பதுதான் சோகக் கதை.

எது எப்படி இருந்தாலும், மக்களுக்கு இது மிக முக்கியப் பொருளாக மாறியிருக்கிறது. அந்த வகையில் அனைத்து வகையிலான மக்களும் பயன்படுத்தும் வகையில் உள்ள திறன்மிகுந்த, ரூ.5000-க்கும் குறைவான 5 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களுக்கு எது தேவை என்பதனை தெரிவுசெய்ய இது உதவும்.

  • ஒன்-ப்ளஸ் பட்ஸ்:13.4mm திறன்கொண்ட ட்ரைவர்களைக் கொண்டுள்ளது. மேலும், சுற்றுப்புற ஒலியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இதில் அடங்கியுள்ளது. 30 மணிநேரம் மின்கல சேமிப்புத் திறனைப் பெற்றுள்ளது. டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பு, ஐபிஎக்ஸ்4 பாதுகாப்பு ஆகியன இதில் அடக்கம். 4.7 கிராம் எடை / மொத்தமாக 37 எடை கொண்ட இதன் விலை ரூ.4,990 ஆகும்.
    ஒன்-ப்ளஸ் பட்ஸ்
  • போட் ஏர்போட்ஸ் 461 TWS: திறன்வாய்ந்த ட்ரைவர்களைக் கொண்டுள்ளது. 40 மணிநேரம் மின்கலச் சேமிப்புத் திறனைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.2,999 ஆகும்.
    போட் ஏர்போட்ஸ் 461 TWS
  • சியோமி மி 2சி: 14.2mm திறன்கொண்ட ட்ரைவர்களை கொண்டுள்ளது. மேலும், சுற்றுப்புற ஒலியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இதில் அடங்கியுள்ளது. 5 மணிநேர இயர்பட்ஸ் மின்கலச் சேமிப்புடன், மொத்தமாக 20 மணிநேரம் மின்கலச் சேமிப்புத் திறனைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆடியோ கோடெக்ஸைக் கொண்டுள்ளது. 4.7 கிராம் இயர்பட்ஸ் எடை கொண்ட இதன் விலை ரூ.2,499 ஆகும்.
    சியோமி மி 2சி
  • ரியல்மீ பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன்: 10mm இடிமுழக்க ஒலி திறன் கொண்ட ட்ரைவர்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக 20 மணிநேரம் மின்கலச் சேமிப்புத் திறனைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புற ஒலியைக் கட்டுப்படுத்தும் அமைப்பைக் கொண்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் இதன் விலை ரூ.4,999 ஆகும்.
    ரியல்மீ பட்ஸ் ஏர் ப்ரோ மாஸ்டர் எடிஷன்
  • ஜேபிஎல் ட்யூன் 225TWS: 12mm தெளிவான ஒலித்திறன் கொண்ட ட்ரைவர்கள், 25 மணிநேரம் மின்கலச் சேமிப்புத் திறனைப் பெற்றுள்ளது. ஜேபிஎல் நிறுவனத்தின் பிரதான ஒலி அமைப்புடன் இந்த இயடர்பட்ஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.8,499 ஆகும்.
    ஜேபிஎல் ட்யூன் 225TWS
Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details