கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான கூகுள் குரோம்காஸ்ட் சாதனம், உங்களின் டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் வசதி கொண்டது. அதற்கு, டேட்டா கார்டு டாங்கிலை உங்கள் டிவியின் HDMI போர்ட்டில் பொருத்தினால் போதும். உடனடியாக, யூடியூப் வீடியோக்கள், மொபைல் / கம்ப்யூட்டரில் உள்ள படங்களை டிவியில் பார்த்திட முடியும். முக்கிய அம்சம் என்னவென்றால், பல விதமான செல்போன் செயலிகளை உபயோகிக்க முடியும். வாய்ஸ் மூலம், டிவியை கன்ட்ரோல் பண்ணும் வசதியும் உள்ளது. இந்த சாதனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கூகுள் குரோம்காஸ்ட்டில் புதிதாக கிட்ஸ் ப்ரோபைல் (kids profile) திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குழந்தையின் பெயர், வயதைக் கொண்டு கணக்குகளை உருவாக்கிக்கொள்ளலாம். குழந்தைகள், எந்தவிதமான செயலியைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வசதி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தபடி கணக்குகளை கலர்புல்லாக மாற்றிக்கொள்ளலாம்.