தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 26, 2023, 5:33 PM IST

ETV Bharat / science-and-technology

கோடைக் காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க 5 டிப்ஸ்

கோடைக்காலத்தில் வீட்டில் உள்ள ஃபேன், ஃபிரிட்ஜ், ஏர் கூலர், ஏசிகளுக்கு அதிக வேலை வந்துவிடும், இந்த நேரத்தில் மின் கட்டணத்தை குறைக்க சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கோடைக்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க 5 டிப்ஸ்
கோடைக்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க 5 டிப்ஸ்

கோடைக்காலம் என்றாலே குளு, குளு சாதனங்களும், ஜூஸ்களும், ஐஸ் கீரிம் வகைகளுமே நினைவுக்கு வருவதுண்டு. இவற்றால் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழ வாய்ப்புள்ளது. குறிப்பாக மின் சாதன பொருள்களால் ஏற்படும் மின் கட்டணம் கூடுதல் சுமையாக மாறிவிடலாம். ஆகவே, மின் கட்டணத்தை குறைக்க பல்வேறு யுக்திகளை பயன்படுத்த வேண்டிய நேரமிது.

தேவைப்படும்போது பயன்படுத்தல்: கோடைக்காலத்தில் வீட்டில் உள்ள ஃபேன், ஃபிரிட்ஜ், ஏர் கூலர், ஏசிகளை பயன்படுத்தும் வழக்கமே. ஆனால், நாம் வீட்டிற்கு வெளியே செல்லும்போதோ அல்லது வீட்டை சுற்றி ஏதாவது வேலையில் இருக்கும்போதே மின்சாதனங்களை அணைத்துவிட்டு செல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பழைய ஏசியை மாற்றுங்கள் அல்லது சர்வீஸ் செய்யுங்கள்:கோடைக்காலத்தில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவது ஏசியில் தான். சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட ஏசிகளில் இன்வெர்ட்டர் தனியாக இருக்கலாம். இதனால் கூடுதல் மின்சாரம் தேவைப்படும். அதேபோல வெண்டிலேட்டர்களில் தூசி படிந்து பேன் சிரமப்பட்டு சுற்றும்போதும் கூடுதல் மின்சாரம் செலவாகும். இதனால் தேவைப்பட்டால், புதிய இன்வெர்ட்டருடன் கூடிய புதிய ஏசியை வாங்கிக்கொள்ளலாம்.

ஃபிரிட்ஜ் பராமரிப்பு:ஒரு வீட்டின் மொத்த மின் நுகர்வில் 15 விழுக்காடு குளிர்சாதனப்பெட்டிக்கு செல்கிறது. இதனால் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிர்சாதனப்பெட்டியைச் சுற்றி காற்றோட்டம் அதிகம் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். இதன் மூலம் எளிதாக அதற்கு காற்று நுகர்வு கிடைக்கும். இதனால், அதன் தொழில்நுட்பகங்களுக்கு செல்லும் மின்சாரம் குறையும். அதேபோல சுவரில் இருந்து குறைந்தது 2 அங்குல தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நேரடி சூரிய ஒளியில் படும்படி ஃபிரிட்ஜை வைக்காதீர்கள்.

தொடர் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்:அனைத்து ஏசிகளும் டைமருடன் வருகின்றன. ஆகவே, இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்தும்போது, அதிகாலையில் அணையும்படி டைமரை செட் செய்துகொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயல்பாகவே குளிராக இருக்கும். ஏசி தேவைப்படாது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 2-3 மணிநேரம் ஏசி பயன்பாட்டை தவிர்க்க முடியும். அந்த நேரத்திலும் குளிர் காற்று தேவைப்பட்டால், மின் விசிறியை பயன்படுத்தாலம்.

கதவு மற்றும் ஜன்னல்களில் கவனம்:ஏசியை அதிக எண்ணுடன் பயன்படுத்தும்போது இயல்பாகவே மின்சார பயன்பாடு அதிகரிக்கும். நீங்கள் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருந்தால், உங்களுக்கு தெரியாமல் எண்ணை கூட்டுவீர்கள். ஆகவே, இதை கவனத்தில்கொண்டு கதவு மற்றும் ஜன்னல்களை மூட வேண்டும்.

இதையும் படிங்க:சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு?

ABOUT THE AUTHOR

...view details