2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.4ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சமின் லிஸ்ட் (ஜெர்மனி) மற்றும் டேவிட் மேக்மில்லன் (அமெரிக்கா) ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'Asymmetric Organocatalysis'(மூலக்கூறு கட்டுமானம்) என்ற பிரிவில் இவர்களின் சிறந்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது குறித்து நோபல் குழு, "மூலக்கூறுகளை உருவாக்குவது என்பது கடினமான கலை. பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் ஆகியோர் மூலக்கூறு கட்டமைப்பிற்கு சரியான புதிய கருவியை உருவாக்கியுள்ளார்கள். இது மருத்துவ ஆராய்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, வேதியியலின் வளர்ச்சிக்கு உதவும்" என்று கூறியுள்ளது.
2020ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இமானுவேல் ஷார்பான்தியே (பிரான்ஸ்), ஜெனிபர் ஏ. டோட்னா (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.