சிம்லா:இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 68 இடங்களை கொண்ட இம்மாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி சராசரியாக 65.92 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வரும் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் அதுவரை தர்மசாலா மற்றும் சிம்லாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பில் வைக்கபடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.