ஹாங்சோ: சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியா - இலங்கை இடையே திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆசிய கோப்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்! - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
Asian Games India womens cricket:ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இலங்கை அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
Published : Sep 25, 2023, 3:21 PM IST
|Updated : Sep 25, 2023, 3:48 PM IST
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
பின்னர், 117 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய இலங்கை வீராங்கனைகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். இதனால், 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது. இதனால், இரண்டு தங்கப் பதக்கங்களுடன் இந்தியா இதுவரை 11 பதக்கங்கள் வென்றுள்ளது.