திருவள்ளூர்:கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது, இங்கு திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தனது சொத்துக்களைப் பதிவு செய்தல் திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவண பதிவுகளைத் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு லஞ்ச குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சமீபத்தில் சார்பதிவாளர் ஒருவர் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து நீக்கம் செய்யப்பட்டார்.
தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த பிரகாஷ் என்பவருக்குக் கூடுதல் பொறுப்பாக இணைப்பதிவாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டு தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுகள் நடைபெற்று வருகிறது.