இவ்வாறு தான் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிப்பதா?
நிச்சயமான மற்றும் நிலையான வருமானம் இல்லாத நிலையில், நாட்டில் ஆண்டுதோறும் விவசாயத்தை கைவிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில், விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்ட அரசாங்கங்கள், ஒருங்கிணைந்த விவசாய சீர்திருத்தங்களைத் தொடங்காமல் அதற்கு பதிலாக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
மக்களவையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிக பயனளிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. விவசாயிகளின் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு களநிலவரங்களை புரிந்து கொள்ளாமல் பெருநிறுவன முதலாளிகளை ஆதரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகள் சங்கங்களை கோபப்படுத்தியுள்ளது.
களத்துமேட்டிலேயே விற்பனை
ஜூன் மாதம் இயற்றப்பட்ட விவசாயிகளின் நலனுக்காக என்று கூறப்படும் அவசர சட்டத்திற்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்குவதற்காக மத்திய அரசு மக்களவையில் மூன்று மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில், முக்கியமானது மசோதா விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் விற்பதற்கான சுதந்திரம்
இவற்றில் முதலாவது மசோதா, விவசாயி தனது பயிரை நாட்டில் எங்கும் விற்பதற்கான சுதந்திரம். இரண்டாவது, வர்த்தகர்களுடன் விவசாயிகளின் முன்கூட்டியே செய்யும் ஒப்பந்தங்களுக்கான சட்ட அனுமதி. மூன்றாவது, பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதல்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று அரசாங்கம் தொடர்ந்து கூறுகிறது. முரண்பாடான கேள்வி என்னவென்றால, தங்கள் கடன்களைத் தீர்ப்பதற்காக, தங்கள் விளைபொருட்களை களத்துமேட்டிலேயே விற்கும் 86% சிறு விவசாயிகள், அவற்றை விற்க மற்ற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் இருப்பார்களா?
வர்த்தகர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சரியான விலைகளை நிர்ணயிக்காததன் மூலம் விவசாயிகளின் நலனுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட சந்தையில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கம், நாட்டின் தனியார் வர்த்தகர்களை கட்டுப்படுத்துமா? தெலங்கானாவின் பருத்தி சந்தைகளில் இந்த வகையான சுரண்டலை நாம் கண்டிருக்கிறோம்.
வர்த்தகர்களைக் கட்டுப்படுத்துவதற்கு சந்தை அதிகாரிகளின் இயலாமை குறித்து விவசாயிகளின் போராட்டங்களை நடத்தி, இறுதியில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததன் மூலம் ஆதரவு விலையை பெற்றதை நாம் கண்டிருக்கிறோம். எந்தவொரு சந்தைக் கட்டணமும் செலுத்தாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும் விற்க சுதந்திரம் வழங்கப்பட்டால், வருமானம் இல்லாத நிலையில் கிடங்குகள் மூடப்படும். மேலும் வர்த்தக சுதந்திரம் என்று பலர், விவசாயிகள் என்ற போர்வையில் பொருட்களை விற்பார்கள்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலிருந்து இறுதியில் பயனடைபவர்கள் வர்த்தகர்கள் தான் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டு, குறுவை மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கு ரூ.1,300 கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதிக விலை கொடுத்து அரசாங்கமே வாங்குவதற்கு பதிலாக, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்குமாறு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளிடம் சொன்னால், அது விவசாயிகளுக்கு உதவுமா? ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் கொண்ட ஒரு சிறு விவசாயி, அதிக விலை பெறுவதற்காக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வேறு இடத்தில் விற்க முயற்சி செய்தாலும், அவர்கள் அவ்வளவு தூரம் பயணித்து சந்தையின் தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பார்கள்? இந்த உண்மைகளை அரசாங்கம் நிச்சயமாக அறிந்திருக்கும்.
இரண்டாவது மசோதா
இரண்டாவது மசோதாவை நாம் ஆராய்ந்தால், நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட சில விதைகள் தரம் குறைந்தவை என நிரூபிக்கப்பட்டபோதும், விவசாயிகளுக்கு இழப்பீடு கூட பெற்று தர முடியாத பரிதாபகரமான சூழ்நிலையில் அரசாங்கம் இருக்கிறது. விவசாயிகளிடம் அவர்களின் மகசூலை வாங்கிக் கொள்வோம் என்ற உறுதிமொழியுடன் விவசாயம் செய்ய சில வகையான விதைகளை வழங்குவதற்காக விவசாயிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் இந்த மசோதாவின் கீழ் வருகின்றன.