டிக்டாக், பெய்டு, யூசி பிரவுசர் உள்ளிட்ட சீன நாட்டின் 59 செயலிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து டிராகன் உலகமானது, அமெரிக்கா வழியாக இந்திய சந்தைக்குள் நுழைய இருப்பதாக ஈடிவி பாரத் டெபுடி செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதி கூறுகிறார். தடை செய்யப்பட்ட பல மொபைல் செயலிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் முதலீடுகளின் உண்மையான முன்னெடுப்பாளர்களைக் கண்டறிவது சிரமமான ஒன்றாக இருக்கிறது.
புதுடெல்லி; பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இருக்கும் சீன இணையதள நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளில் ஈடுபட்டிருக்கும் உண்மையான முன்னெடுப்பாளர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது.
சில தொழில்நுட்ப பெருநிறுவனங்களில், குறிப்பாக ஜாக்மா மற்றும் டெண்சென்ட் ஆகியோரால் நிறுவப்பட்ட பெய்டு, அலிபாபா போன்றவை சீன நிறுவனங்கள் என்பது நன்றாக தெரிந்த விஷயம். இவைகள் பொதுவாக பெரிய மூன்று நிறுவனங்கள் அல்லது ‘சீனாவின் பாட்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இதர சில சீனாவின் தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் மொபைல் செயலிகள் அமெரிக்கா மற்றும் இதர பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த சீனா பிராண்ட்களாக அவை இல்லை.
உதாரணத்துக்கு தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் பட்டியலில் காணப்படும் பல மொபைல் செயலிகள் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
சீட்டா மொபைல் (ஸ்டாக் டிக்கர் சிஎம்சிஎம்) என்ற நிறுவனத்தின் சீட்டா மொபைல் பிரவுசர், செக்யூரிட்டி மாஸ்டர், க்ளீன் மாஸ்டர்(ஸ்மார்ட் போனில் இருக்கும் ஜங்க் கோப்புகளை அழிக்கக் கூடிய செயலி) உள்ளிட்ட செயலிகளில், அதன் உபயோகம் மற்றும் செயல்பாடுகள் ஆங்கிலம் அல்லது மேற்கத்திய பெயர்களைக் கொண்டிருக்கின்றன. இது சீனாவுடன் வெளிப்படையான தொடர்புகளில் இல்லை என்ற தோற்றத்தை தருகிறது.
‘த கேட்வே ஹவுஸ்’ என்ற வெளியுறவுக் கொள்கை சிந்தனை அமைப்பின் மும்பையைச் சேர்ந்த அமித்பந்தாரி என்பவர், “சீன நிறுவனங்கள்தான் என்ற சந்தேகத்தை தவிர்க்க அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுவது அந்த நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கிறது” என்றார்.
“தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்தவரை, முழுமையாக சீனாவில் இருந்து வெளிவந்தவை என அவைகள் மீது ஏதோ ஒரு சந்தேகம் இருக்கிறது. எனவே அந்த நிறுவனங்களின் டேட்டா பாதுகாப்பானது அல்ல என்று நீண்டகலமாக கிசுகிசுக்கப்படுகிறது” என ஈடிவி பாரத்திடம் அவர் கூறினார்.
சீட்டா மொபைல் நிறுவனத்துக்கு சீன கைப்பேசி தயாரிப்பாளர் எக்சோமியுடன் தொடர்பு இருக்கிறது என்றும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அது பெரும் பங்கைக் கொண்டுள்ளது என்பதும் சிலருக்குத் தெரியும்.
சியோமி, ரெட்மி போன்கள், எம்ஐ போன்கள், போகோ போன்கள் என்று மூன்று வெவ்வெறு பிராண்ட்களில் அவை மொபைல் போன்களை சந்தைப்படுத்துகிறது. எம்ஐ பே, எம்ஐ வீடியோ, எம்ஐ ஸ்டோர், எம்ஐ வெப் பிரவுசர்உள்ளிட்ட சொந்த பிராண்ட் பெயரைக் கொண்ட சொந்த மொபைல் பயன்பாடுகளை அதன் மொபைல் போன்களில் மூன்கூட்டியே பதிவேற்றம் செய்து விற்பனை செய்து வருகின்றன.
எனினும் சியோமி குறித்த குறைவான புரிதல் காரணமாக அதன் நிறுவனர் லீ ஜுன்ஸுக்கு சீன மொபைல் செயலிகளான கிளீன் மாஸ்டர், செக்யூரிட்டி மாஸ்டர், சேட்டெக் கேம்ஸ், சேட்டெக் கீ போர்டு, போட்டோ கிரிட் மற்றும் இதர செயலிகளுடன் தொடர்பிருப்பது இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய அரசால் தடை செய்யும் முன்பு வரை யாருக்கும் தெரியவில்லை. இவற்றை குறிப்பிடத்தக்க சீன செயலிகளாகவும் பலர் கருதவில்லை.
சீட்டா மொபைலின் தலைமை அலுவலகம் சீனாவின் பெய்ஜிங்கில் உள்ளது. ஆனால், கிங்சாஃப்ட் நெட் ஒர்க் மற்றும் கோநியூ இமேஜ் நிறுவனங்களின் இணைப்பால் 2010-ல் உருவான இது அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனமே பின்னர் சீட்டா மொபைல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.