தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

வேளாண்மை லாபகரமான தொழிலாக மாற விரிவான வேளாண்மைக் கொள்கை தேவை!

ஹைதராபாத்: விவசாயிகளுக்கு ஆதரவு விலையை உறுதிசெய்வதற்காக தெலங்கானா அரசு விரிவான வேளாண்மைக் கொள்கையை எதிர்கொண்டுள்ள நேரத்தில், மத்திய அரசு நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

Where is a comprehensive agriculture policy?  விரிவான விவசாயக் கொள்கை எங்கே  தெலங்கானா  விரிவான விவசாயக் கொள்கை  விரிவான விவசாய முறை  தெலங்கானா விரிவான விவசாயக் கொள்கை  தெலங்கானா  telangana  comprehensive agriculture.  comprehensive agriculture policy
விவசாயம் லாபகரமான தொழிலாக மாற விரிவான விவசாயக் கொள்கை தேவை

By

Published : May 21, 2020, 10:30 AM IST

வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு உரிய ஆதரவு விலையும், விவசாயிகளுக்கு நீடித்த வருமானமும் கிடைக்க சந்தையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மிகைப்படுத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிப்பதைத் தவிர்த்து ஒரு செயல்திட்டத்தினை அரசு உருவாக்க வேண்டும். அதைப் பின்பற்றி குறிப்பிட்ட இலக்குகளை அடைய வேண்டும்.

வேளாண்மையை லாபகரமான தொழிலாக மாற்ற சரியான வேளாண்மைக் கொள்கை நம்மிடம் இல்லை. மாறாக நம்மிடம், லாபமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பாரம்பரியமான வேளாண்மை உற்பத்திப் பழக்கவழக்கங்கள் உறைந்துகிடக்கின்றன.

உணவு உற்பத்தி, விநியோகம், சந்தைப் பகிர்வு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்துவதன் வாயிலாக விவசாயிகளின் நம்பிக்கையை அரசு பெற முடியும். விவசாயிகளுக்கு நல்ல ஆதரவு விலையை உறுதிசெய்வதற்காக தெலங்கானா அரசு விரிவான வேளாண்மைக் கொள்கையை எதிர்கொண்டுள்ள நேரத்தில், மத்திய அரசு நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

பழமையான சாகுபடிமுறையைக் கைவிடுக!

  • என்ன உற்பத்தி செய்ய வேண்டும்?
  • எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும்?
  • மக்களின் தேவை எவ்வளவு?
  • ஏற்றுமதிக்கான தேவை எவ்வளவு?

என்பது குறித்து விரிவான சாகுபடி முறை இதுவரை உருவாக்கப்படவில்லை. பராம்பரிய, ஒரே மாதிரியான சாகுபடி முறை, நுகர்வோரின் தேவை, விநியோகம், விலைகளில் உறுதியற்றத் தன்மை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது.

அரசு தன்பங்கிற்கு சந்தையின் தேவையை வைத்து வர்த்தகர்கள் விலை ஏற்ற இறக்கத்தில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆர்வம் காட்டாமல் விட்டுவிட்டது. மேலும், விலை வீழ்ச்சியடைவதற்குப் பின்னால் இருக்கும் வர்த்தகர்களைக் கட்டுப்படுத்த அரசுகள் தவறிவிட்டன.

முக்கியமான சாகுபாடி காலத்தில் சந்தையில் ஏற்படும் விலையேற்ற இறக்கங்கள் குறித்து ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள். அதனைக் களைய தேசிய வேளாண்மைச் சந்தையில் இருக்கக்கூடிய பிரச்னைகளை நீக்கி அந்த அமைப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

வளர்க்கப்படும் பயிர் உள்நாட்டில் நுகரப்படுவதை உறுதிசெய்வதன் வாயிலாகவும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பயிர்களை அடையாளம் கண்டு அதன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் நுகர்வோர், விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

இதைச் செயல்படுத்த, மண்ணின் தன்மை, கிடைக்கக்கூடிய நீரின் அளவு, காலநிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பயிர்செய்யும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தெலங்கானா அரசு கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் மூலம் இத்திட்டத்தில் முன்னேற விரும்புகிறது.

பரந்துபட்ட கலந்துரையாடலின் மூலம் விரிவான வேளாண்மைக் கொள்கையை அறிமுகப்படுத்துவோம் என அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

உரிய விலை நிர்ணயிப்பது அவசியம்

வெவ்வேறு காலங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, தேர்ந்தெடுக்கும் முறையான திட்டத்தின்மூலம், பயிர்கள் பயிரிடப்படும்போது அதன் விலை கட்டுப்பாட்டில் இருக்கும்.

உரிய விலை நிர்ணயிப்பது முக்கியமானது, உரிய விலை வழங்கப்பட்டால் விவசாயிகள் தங்களது ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். விவசாயிகள் இல்லையென்றால் நம் நாட்டின் கதி என்னவாகும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியது வேளாண்மைத் துறைதான்.

நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குறைந்தது ஐந்து வேளாண்மை உற்பத்திப் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்து அதனுடன் ஏற்றுமதி செய்யும் துறைகளை இணைக்க வேண்டும்.

தெலங்கானா ஒழுங்குமுறை பயிர்கொள்கைக்கு விவசாயிகள் ஆதரவாகவே உள்ளனர். அவர்கள் அரசின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் தயராகவுள்ளார்கள். அரசின் நேர்மறையான, உறுதியளிக்கும் அணுகுமுறை விவசாயிகளைக் காக்கும். பயிரிடப்படும் முழுப் பயிர்களையும் அரசே வாங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலையையும் வழங்க முடியும்.

விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்குப் பரந்த சலுகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. ஆனால், அதைக் கண்காணித்து செயல்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன்கள் வழங்குவது, சாகுபடி செலவினங்களைக் குறைப்பது, பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு உள்ளிட்ட விரிவான வேளாண்மை முறைகளைப் பின்பற்றுவதற்கான ஆதரவு அளிப்பது, உள்நாட்டில் உற்பத்திக்கான தேவையை உயர்த்துவது, பயிர்க் காப்பீட்டு வசதிகளை வழங்குவது போன்றவற்றை செய்வதன் வாயிலாக விவசாயிகள் தங்கள் விலை பொருள்களுக்குச் சரியான, மதிப்புமிக்க விலையைப் பெறமுடியும்.

இது உள்நாட்டு வேளாண்மைத் துறையின் வளர்ச்சியில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும். இந்த அம்சங்களின் கலவையுடன் ஒரு புதிய வேளாண்மைக் கொள்கை கொண்டுவரப்பட்டால், நாட்டிலுள்ள கிராமங்கள் வளப்படுத்தப்படும். எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இறுதியில் விவசாயிகளின் விலைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

விவசாயிகளின் இந்த வேதனையைப் புறக்கணிக்கும் எந்த முயற்சியும் பலனளிக்காது. நல்ல திட்டங்களை வரவேற்பதும், நடைமுறைப்படுத்துவதும் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது அத்திட்டத்தின் முழுப்பலன்களையும் விவசாயிகளை அனுபவிக்கச் செய்வது. விவசாயிகள் திட்டங்களின் மூலம் பயன்பெறுவது அனைத்தும் ஆட்சியாளர்களின் நேர்மையையும், அத்திட்டத்தை செயல்படுத்துபவர்களின் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சாகுபடியில் மாற்றம் வேண்டும்

பல ஆண்டுகளாக ஒரே பயிரை வளர்ப்பது, பயிர்சாகுபடியில் மாற்றத்தை பின்பற்றாதது போன்ற குறைபாடுகள் விளைச்சலைப் பாதிக்கின்றன. இதுபோன்ற சாகுபடி முறை விளைச்சலைக் குறைக்கும், மண்ணை பலவீனப்படுத்தும். உணவுப் பதப்படுத்தும் தொழில் குடிசைத் தொழில்போல் ஊக்குவிக்கப்பட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.

சம்பா சாகுபடி (காரீப்) காலத்தில் நெல்லுக்குப் பதில் வேறு பணப்பயிர்களை மாற்றம்செய்து பயிரிட வேண்டும். ஆனால், ஈர நிலங்களுக்கு இரண்டு வகையான நெற்பயிர்களை மட்டுமே பயிரிட முடியும். வேறு பணப்பயிர்களை விளைவிப்பது கடினமான ஒன்று.

இதுபோன்ற பிரச்னைகளைக் களையவும், சரியான திசைவழியில் செல்லவும் மண்ணின் தன்மை, காலநிலை, கிடைக்கக்கூடிய நீரின் அளவு ஆகியவை குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி லாபம் தரக்கூடிய பயிர்களுக்காக விரிவான வேளாண்மைக் கொள்கையை அரசு வகுக்க வேண்டும்.

இதையும் படிங்க:கரோனா லாக்டவுனை விலக்க இரு புதிய யுக்திகள் கைகொடுக்குமா?

ABOUT THE AUTHOR

...view details