தெற்கு சீன கடற்பகுதியை சீனா ராணுவமயமாக்கி வருவதையடுத்து அமெரிக்காவின் வர்த்தகத் துறை, 24 சீன நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. தவிர அமெரிக்க வெளியுறவுத் துறையானது சீனர்கள் பலருக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளும் வகையில் உரையாற்றிய ட்ரம்ப், தமது உரையில் சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார்.
“அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் நாம் மதிக்க வேண்டும். நாட்டின் அளவைப் பொருட்படுத்தாமல், சர்வதேச சட்டத்தின்படி கடல் பகுதிகளில் சுதந்திரத்தையும் அமைதியையும் நிலவ செய்ய வேண்டும்” என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
தெற்கு சீன பகுதி சுதந்திரமாக இருப்பதை வலுயுறுத்திய பாம்பியோ, “தெற்கு சீன கடலில் பிற நாடுகள் கடலோர வளங்ககளை அணுகுவதை தடுக்க சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சில சீன நிறுவனங்கள்தான் பொறுப்பானவர்கள். இதற்கு காரணமாகவுள்ள சீனர்களுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்த பணியில் வெளியுறவுத்துறை ஈடுபட உள்ளது.
இந்த தனிநபர்கள் இப்போது அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல அந்த தனிநபர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதே போல விசாகட்டுப்பாடுகளுக்கு உட்பட நேரிடலாம்.
கூடுதலாக, வணிகத் துறையானது சீன அரசின் 24 நிறுவனங்களையும் தடை பட்டியலில் சேர்த்துள்ளது. இதில் சீனாவின் கம்யூனிகேஷன்ஸ் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
2013ஆம் ஆண்டில் இருந்து சீனா தமது அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி தெற்கு சீனா கடல் பகுதிகளில் 3000 ஏக்கருக்கும் அதிகமான சர்ச்சைக்குரிய பகுதியை சொந்தம் கொண்டாடுகிறது.
அந்த மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் அண்டை நாடுகளின் இறையாண்மை உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வேலையிலும் சீனா ஈடுபட்டுள்ளது. வெளியே தெரியாத அளவுக்கு சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் காரணமாக இருக்கிறது.
சீன கம்யூனிகேஷன் கட்டுமான நிறுவனம் சீனாவின் தெற்கு சீன கடல் சாவடிகளில் அழிவுக்கான அகழிகளை தோண்டிவருகிறது. முன்னணி ஒப்பந்ததாரர்களில் ஒருவரை தமது உலகளாவிய ஒன் பெல்ட் ஒன் சாலை (இப்போது இந்த திட்டம் பெல்ட் மற்றும் ரோடு முயற்சி அல்லது பிஆர்ஐ என்று அழைக்கப்படுகிறது) திட்டத்துக்கும் சீன அரசு பயன்படுத்துகிறது.
சீன கம்யூனிகேஷன் கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முறைகேடு, நிதியை கொள்ளையடித்தல், சுற்றுச்சூழல் பேரழிவு உள்ளிட்ட இதர முறைகடுகளில் உலகம் முழுவதும் ஈடுபடுகின்றன” என்று பாம்பியோ கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்தோ-பசிபிக் மண்டலத்தில் குறிப்பாக தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவின் பிராந்திய மோதல்களை சுட்டிகாட்டி பேசிய பாம்பியோ, “சீன கம்யூனிகேஷன் கட்டுமான நிறுவனம் மற்றும் இதர அரசு நிறுவனங்களை தமது விரிவாக்க செயல்பாடுகளை அமல்படுத்தும் ஆயுதங்களாக அந்நாட்டு அரசு பயன்படுத்தக் கூடாது.
தெற்கு சீன கடலில் நிர்பந்தபடுத்தும் நடவடிக்கைகளை சீனா தொடரும் வரை அமெரிக்காவின் நடவடிக்கைகளும் இருக்கும். சீனாவின் இத்தகைய வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்க, தொடர்ந்து தமது கூட்டணி நாடுகள் மற்றும் ஆதரவு நாடுகளின் பக்கம் அமெரிக்கா துணைநிற்கும்,” என்றும் பாம்பியோ கூறினார்.
தெற்கு சீன கடல்பகுதியில் தமது மேலாதிக்க அணுகுமுறையால், பல நாடுகளுடன் பிராந்திய சச்சரவுகளில் சீனா ஈடுபட்டுவரும் நிலையில்தான் பாம்பியோவின் இந்த அறிக்கை வந்திருக்கிறது.
லடாக் பகுதியில் இந்தியா-சீனா எல்லை மோதல் காரணமாக 45 ஆண்டுகளில் முதன்முதலாக இருதரப்பு வீரர்கள் உயிரிழந்திருப்பது சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ள நிலையில் பாம்பியோவின் கருத்து வெளியாகி இருக்கிறது.
கடந்த மாதம் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படையானது, தெற்கு சீனப்பகுதியில் கடல்வழி தாக்குதல் நடவடிக்கைள் பயிற்சிகளை மேற்கொண்டது.
பாரசெல் தீவுகளுக்கு அருகே சீனாவின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தெற்கு சீன கடல்பகுதியில் மூன்று அணுசக்தி விமானம் தாங்கி கப்பலை நிறுத்தி உள்ளது.
தெற்கு சீன கடல் பகுதி பிராந்தியத்தில் உள்ள இதர நாடுகளுடன் பிராட்லி மற்றும் பாரசெல் தீவுகள் தொடர்பாக சீனா சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறது.
பிராட்லி தீவுகளுக்கு புருனை, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. பாரசெல் தீவுகளுக்கும் வியட்நாம் மற்றும் தைவான் சொந்தம் கொண்டாடி வருகிறது.
உலகிலேயே மிகவும் அதிக வர்த்தக கப்பல் போக்குவரத்து நடைபெறும் தெற்கு சீன கடல்பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் உரிமைகளில் சீனா தலையிடுவதாக ஹேக் சார்ந்த நிரந்தர நீதிமன்ற நடுவாமை அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்புக் கூறியது.
இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன் பிடி மற்றும் பெட்ரோலியம் ஆய்வு நடவடிக்கைகளில் சீனா தலையிடுவதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தெற்கு சீன கடற்பகுதியில் செயற்கையான தீவுகளை உருவாக்கி இந்தப் பிராந்தியத்தில் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சீன மீனவர்களைத் தடுக்க அந்நாட்டு அரசு தவறியது குறித்தும் குற்றஞ்சாட்டியுள்ளது.
தெற்கு சீன கடல் பகுதிகளில் சீனா, கடற்சார் சட்டங்களை மீறி நடந்து கொள்வதாக மீண்டும் கடந்த மாதம், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
புதன்கிழமையன்று வெளியான பாம்பியோவின் அறிக்கையைத் தொடர்ந்து மூத்த வெளியுறவுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையேயான தெற்கு சீன கடல் வழக்கில் சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் ஆதரிக்கின்றன” என்று கூறினார்.
“கடல் வளங்களை அணுகுவதற்கான உரிமை கோரும் பிற நாடுகளை தடுக்கும் வகையில் நிர்பந்தத்துடன் கூடிய உத்திகளை செயல்படுத்தி வெட்கக்கேடான முறைகளில் சீனா ஈடுபட்டு வருவதற்கு எதிராக ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தும் வகையில் தென்கிழக்கு ஆசிய கடல்பகுதி நாடுகள் தங்களது இறையாண்மை உரிமைகளை தக்கவைக்கவும் அந்த நாடுகளுக்கான ஆதரவை வலுப்படுத்தும் வகையிலும் வாஷிங்க்டன் தொடர்ந்து செயல்படும்” என்றும் அந்த அலுவலர் கூறி உள்ளார்.
மேலும், “சர்ச்சைக்குரிய சாவடிகளில் ராணுவத்தைக் குவிப்பது சுற்றுச்சூழல் அழிவுக்கான நில மீட்பில் ஈடுபடுவது போன்ற சீனாவின் இந்த செயல் காரணமாக பவளப்பாறைகளுக்கு ஈடு செய்யமுடியாத சேதம் ஏற்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் பகுதியிலும் அண்டை நாடுகளுக்கு எதிரான வற்புறுத்தலின் தளங்களாக இதே தளத்தை உபயோகிக்கின்றனர்.
கடல் வளங்களை அணுகுவதற்கு உரிமைகோடும் நாடுகளை மிரட்டுவதற்கு மக்கள் சீன ராணுவத்தின் கடற்படை மற்றும் சீன ராணுவத்தின் பிண்ணனியில் சிவில் கப்பல்களை அந்நாடு பயன்படுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.
இதே செய்தியாளர் சந்திப்பில் ஒரு மூத்த வணித்துறை அலுவலர் கூறுகையில், “தெற்கு சீன கடல்பகுதியில் ஆழமற்ற கடல்பகுதிகளை ஊடுருவி ராணுவமயமாக்கும் நடவடிக்கையில் சீனாவின் பங்கு இருப்பதை அடுத்து, அமெரிக்காவின் தடை பட்டியலில் சீனாவின் 25 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான காரணங்களைக் கொண்ட தரப்பினர், எந்த செயலில் ஈடுபட்டாலும் அது எங்களுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எந்த ஒன்றையும் அமெரிக்காவிடம் கொடுக்க வேண்டும். அதே போல சில பொருள்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் அதனை ஏற்றுமதி செய்யும்போது அல்லது மறு ஏற்றுமதி செய்யும்போது அல்லது பட்டியலில் உள்ள ஒரு தரப்பின் நாட்டுக்கு மாற்றுதல் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட லைசென்ஸ் தேவை.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், கருவிகள், மென்பொருள்கள் அல்லது தொழில்நுட்பம் ஆகியவற்றை பட்டியலில் உள்ள தரப்பினருக்கு மாற்ற குறிப்பிட்ட அனுமதிக்காக வணிகத் துறையிடம் முறையிட வேண்டும். அதன் பின்னர் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை, சில நேரங்களில் எரிசக்தி துறை ஆகியவற்றுடன் ஆலோசனை செய்து உரிய முடிவு எடுக்கப்படும். முடிவில் அனுமதி கொடுக்கப்படும் அல்லது மறுக்கப்படவும் கூடும்.
சீனாவுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க நடவடிக்கை என்பது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் இறையாண்மையை பாதுகாக்கவும் மற்றும் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தங்களுக்குள் உள்ள பிரச்னைகளில் தீர்வு காண்பதற்குமான பரஸ்பரம் பகிர்வு கண்ணோட்டத்தின் ஆதரவின் அடிப்படையில் எடுக்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் சீனா உடனான எல்லை மோதலில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் காதுகளுக்கு இது இன்னிசையாகவே இருக்கும்.
சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் விரிவாக்கக் கொள்கையின் கீழ் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. இதையடுத்து, ஜப்பானின் கிழக்கு கடற்கரையை ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையுடன் இணைக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளத்துக்காக பணியாற்றுதல் கப்பல் போக்குவரத்தை திறப்பது ஆகிய கோரிக்கைகளுக்காக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் குவாட்டில் இந்தியாவும் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறது.
இதையும் படிங்க: மத்தியத் தரைக் கடல் பகுதியில் மோதல் போக்கு : துருக்கி - கிரீஸ் ராணுவ பலம் ஓர் ஒப்பீடு!