நேரில் மற்றும் தபால் வாக்குகள் மூலம் ஏற்கனவே 9 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். ஆனால், மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலில் வன்முறைகள் நிகழலாம் பல அமைப்புகள் கணித்துள்ளது.
"ஜோ பிடனுக்கு ஆதரவளிக்கும் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள், சுயேச்சைகள், ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கவுள்ள குடியரசு கட்சி வாக்காளர்கள் ஆகியோருக்கிடையே பதற்றம் நிறைந்த கவலை தெரிகிறது" என வெள்ளை மாளிகையின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA) தலைவர் ஸ்டீவன் ஹெர்மன் கூறுகிறார்.
"மிச்சிகன் போன்ற மாநிலங்களில் மக்களிடம் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தப்படலாம் என்ற கவலைகள் உள்ளன. ஆனால் உண்மையில் மக்கள் வெளியே சென்று வாக்களிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கரோனா வைரஸ் பற்றிய அச்சங்கள் காரணமாக மக்களிடையே தயக்கங்களை ஏற்படுத்தியது தான், மக்கள் தங்கள் வாக்குகளை ஆரம்பத்தில் அனுப்பியதற்கான ஒரு காரணம்" என்று ஸ்டீவன் ஹெர்மன் கூறுகிறார்.
முக்கியமான கருத்துக் கணிப்புகளுக்கு முன்னதாக வெளிவந்த அறிக்கையின்படி வெள்ளை மாளிகையை சுற்றி எண்ணிலடங்கா தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தனியார் வணிக கட்டடங்கள் எந்தவொரு சேதத்திற்கும் உள்ளாகலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.
"சில அசம்பாவிதங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு அல்ல, மாறாக புதன்கிழமை இரவில் தான் தெளிவான தகவல் தெரியவரும் என்ற கவலை உள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி போராடலாம். இந்த ஆண்டு நடந்த முந்தைய ஆர்ப்பாட்டங்களில் நாம் கண்டது போல் தீவிர இடதுசாரிகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் சிக்கலை ஏற்படுத்த, மக்கள் தாமாகவே முன்வந்து போராட வருவதற்கும் ஒரு சிலரை உண்மையிலேயே தூண்டுவதற்கும் இது தேவைப்படுகிறது" என்று டி.சி.யைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசிய ஹெர்மன் மேலும் கூறினார்.
"வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள வாஷிங்டன் டி.சி.யின் தெருக்களில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஜன்னல்களை அடித்து நொறுக்குவதையும், தீ வைப்பதையும் தடுப்பதற்காக ஏராளமான தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம். நிறைய முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வரும் நாள்களில் மக்களின் உள்நாட்டு எழுச்சியை நாம் காணலாம் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் எந்தவொரு சம்பவமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், தேர்தல் முடிவுகள் மற்றும் போட்டியாளர் வெல்லும் வாக்கு வித்தியாசத்தை பொறுத்து இவை நடக்கலாம்" என்று ஹெர்மன் மேலும் கூறுகிறார்.
முடிவுகள் அனைத்தும் வாக்குப்பதிவு எவ்வளவு துல்லியமானது என்பதைப் பொறுத்தது. பென்சில்வேனியாவை தவிர்த்து ஜோ பிடன் 270 வாக்காளர் குழு வாக்குகளைப் பெற முடிந்தால், தேர்தலில் பெரும்பகுதி முடிந்துவிட்டது என்று அர்த்தம். முடிவுகளை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் செல்லப் போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இது ஒரு விதிவிலக்காக இருந்தபோதிலும் தேர்தல் தினத்தின் மாலையில் முடிவுகளைப் பெற முடியும் என்று அவர் நம்புகிறார் என்று அமெரிக்க தேர்தல்களையும் அரசியலையும் பல ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து வரும் ஹெர்மன் கூறுகிறார்.