"ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா நம் நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும். பிடனைப் போலல்லாமல், உலகெங்கிலும், அவர்கள் ஏற்படுத்திய சோகத்திற்கு அவர்களை முழு பொறுப்பேற்க வைப்பேன்” என்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தனது அதிகாரப்பூர்வ மறு நியமன உரையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். நான் ஏற்கனவே சில காலமாக செய்து வருவதை நீங்கள் கவனித்திருந்தால், நமது நிறுவனங்களும் வேலைகளும் நம் நாட்டில் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஜோ பிடனின் கொள்கைகள் “சீனாவிற்காக உருவாக்கப்பட்டது.” எனது கொள்கைகள் ‘அமெரிக்காவிற்காக உருவாக்கப்பட்டது” என்று டிரம்ப் அதிபர் தேர்தலில் தனது போட்டியாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடனை குறிவைத்து மேலும் கூறினார்.
1979ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை அங்கீகரிப்பதற்காக பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்த முதல் அதிகாரபூர்வ தூதுக்குழுவின் ஒரு அங்கமாக இளம் செனட்டரான பிடன் இருந்தார். ஒபாமா ஆட்சி காலத்தில் துணைத் அதிபராக இருந்தபோது, 'வளர்ந்து வரும் சீனா சாதகமானது, நேர்மறை வளர்ச்சிக்கானது ' என்று அவர் அப்போதைய நடைமுறையில் இருந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். பிடனின் வேட்பாளர் நியமன ஏற்பு உரையில் சீனா, ரஷ்யா அல்லது பிற வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், முந்தைய ஜனநாயக கட்சியின் முதன்மை விவாதத்தில் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு ‘கொள்ளையன்’ என்று அழைத்தார்.
தேர்தலுக்கான மோதல்கள்
“அமெரிக்க தேர்தல்களில் சீனா இடம்பெறுவது என்பது வழக்கத்திற்கு மாறானதல்ல. குறிப்பாக பொருளாதாரம் குறித்தும், சில சமயங்களில் அவற்றை யார் கையாளப் போகிறார்கள் என்பது பற்றிய உத்திசார்ந்த நிலையிலும் அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் பெயர் அடிபடுவது என்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அதிபர் ட்ரம்ப் அதை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளார், ஏனெனில் அவர் கோவிட் மீது போதுமான நடவடிக்கை எடுக்காததால் அவர் குறி வைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். எனவே சீனாவை முன்னிறுத்தியும், மையப்படுத்தியும் வருவதற்கான ஒரு காரணம், கோவிட்டிற்கு சீனா மீது பழிபோட முயற்சிக்கத்தான்” என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் திட்டமிடல் நிபுணரும் சீனியர் ஃபெலோவுமான தன்வி மதன் கூறினார்.
“எனவே தான் அவர் அதை‘ சீனா வைரஸ்’ என்று அழைப்பார். ஓரளவிற்கு இது சீனர்களால் நம் நாட்டில் பரவியது என்று சொல்ல வேண்டும், நிர்வாகம் இந்த வெவ்வேறு வழிகளில் அவற்றை எடுத்துக்கொள்கிறது. இது அரசியல் ரீதியாக வெல்லும் நடவடிக்கை என்று அவர் கருதுகிறார். ஓரளவு கோவிட் காரணமாக மட்டுமல்ல, குறிப்பாக வர்த்தகம் குறித்தும், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாகவும், அவர் சீனாவைப் பற்றி பேசுவது அவரது ஆதரவிற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார், ”என்று தன்வி மதன் மேலும் கூறினார்.
டிரம்ப், பிடனுக்காக ஒரு ‘சீன பருந்து பொறி’ வகுத்துள்ளாரா, குடியரசுக் கட்சியினர் தங்களது பரப்புரையின்போது பெய்ஜிங் பற்றிய தங்கள் தொனியை கடுமையாக்க நிர்பந்திக்கப்படுவார்களா? மேலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினால் டிரம்ப், சீனா மீது அழுத்தம் கொடுப்பாரா? என்ற கேள்விகள் எழுகின்றன
டிரம்பின் தீவிரம் சற்று குறையும்
"குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தீவிரமான அவர்கள் தொனி கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாகும் என்று நான் நினைக்கிறேன். ஜனநாயக கட்சியினர் மனித உரிமைகள் மற்றும் அது போன்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசக்கூடும். ஆனால் வித்தியாசம் அல்லது இடைவெளி இப்போது மிகவும் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன், அதை யாராலும் தக்க வைக்க முடியாது. இது புவி அரசியலைப் பற்றியது, இது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பற்றியது, எந்தவொரு அமெரிக்கத் தலைவரும் அதில் சமரசம் செய்ய விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவால் விடுவதை சீனா நிறுத்தப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்” என்று தென் கொரியா மற்றும் கனடாவிற்கான முன்னாள் இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.
"ஜனநாயக கட்சியினர் சீனாவைப் பற்றி வேறு விதமாக பேசியுள்ளனர். பிடன் தனது (ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு) உரையில் இதைப் பற்றி பேசியிருக்க மாட்டார், ஆனால் நீங்கள் மற்ற தளங்களையும் அறிக்கைகளையும் பார்த்தால் அவர்கள் ‘நாங்கள் சீனா மீது கடுமையாக இருப்போம்’ என்றும் கூறுகிறார்கள். திட்டமிட்டு செயல்படுவது, கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவது, பொருளாதாரப் கண்ணோட்டத்தில் அமெரிக்க பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் புதுப்பிக்கவும் அவை நியாயமான வர்த்தகம் என்று அழைக்கப்படுவதை உள்நாட்டில் பலப்படுத்துவது போன்ற வழிகளை செயல்படுத்துகிறார்கள். சீன பிரச்சினையில் மக்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் அவர்கள் உலக அரங்கில் பரந்த வெளியுறவுக் கொள்கை சார்ந்த அம்சங்களை கருதி வாக்களிக்கக்கூடும், ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தல், உண்மையில் அதிபர் டிரம்ப்பைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதுதான்” என்று 'விதியின் முக்கோணம்: பனிப்போரின் போது அமெரிக்க-இந்தியா உறவுகளை சீனா எவ்வாறு வடிவமைத்தது' என்ற புத்தகத்தை எழுதியுள்ள தன்வி மதன் குறிப்பிட்டார்.