தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

எதிரிகளை அச்சுறுத்தும் புதிய ஆயுதம் ரஃபேல்!

பல்வேறு சிறப்பு வசிகளை கொண்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் ராணுவத்திற்கு பல மடங்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

rafale war flight
rafale war flight

By

Published : Jul 30, 2020, 10:06 PM IST

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்த அவர்கள் எல்லைக்குள் நாம் நுழைய தேவையில்லை. அண்டை நாட்டிற்கு எந்தவித சந்தேகமும் இன்றி நமது விமானப்படை இப்போது நமது வான்வெளியில் இருந்தபடி பயங்கரவாதிகளின் தளங்கள் மீது குண்டு மழை பொழியலாம்.

ரஃபேல் போர் விமானங்களின் வருகையின் மூலம் இதுபோன்ற சாத்தியமில்லாத செயல்கள் இப்போது சாத்தியமாகியுள்ளன. சீன எல்லைக்கு அருகில் இருக்கும் லே உள்ளிட்ட மலைப் பிரதேசத்திலிருந்தும் ரஃபேல் ஜெட் விமானம் எளிதில் புறப்படலாம்.

ரஃபேல் என்றால் பிரெஞ்சு மொழியில் ‘நெருப்பின் வெடிப்பு’ என்று பொருள். அதன் பெயருக்கு ஏற்றார்போல, ரஃபேல் இந்தியாவின் எதிரிகளுக்கு நெருப்பின் சூறாவளியாக இருக்கப் போகிறது.

பிரான்ஸ், எகிப்து போன்ற நாடுகளில் ஏற்கனவே ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுபவை மிகவும் நவீனமானவை. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் கூடுதல் அமைப்புகளை பொருத்துவதன் மூலம், இந்தியாவின் ரஃபேல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

  • ராக்கெட் ஏவுகணை மூலம் வானிலிருந்தபடியே வான் வழி தாக்குதல்களை தடுக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் 150 கி.மீ தூரத்தில் எதிரி போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸர் ஏவுகணைகளைசுட முடியும். நமது விமானத்தின் இருப்பை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்பே எதிரி போர் விமானத்தின் கதை முடிந்துவிடும். ராக்கெட் ஏவுகணையில் ‘ராக்கெட் ராம்ஜெட் மோட்டார்’ உள்ளது. இதன் விளைவாக இந்த ஏவுகணையின் என்ஜின் திறன் மிக அதிகமாக உள்ளது. இது எந்த வானிலையிலும் வேலை செய்யும்.
  • தரை இலக்குகளை அழிப்பதற்கு SCALP ஏவுகணை பயன்படும். இது 300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள எதிரி தளங்களையும் அழிக்கும் திறன்கொண்டது.
  • அருகிலுள்ள எதிரி விமானங்களை விண்ணிலேயே சுட மைக்கா ஏவுகணை. இது 80 கி.மீ. தூரம் வரையிலும் தாக்கக்கூடியது. இது 'சைலண்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது.
  • ஸ்பெக்ட்ராஎன்பது ஒரு மின்னணு போர் அமைப்பு. இது எதிரி ரேடர்களை இடைமறித்து ரஃபேலின் இருப்பை மறைக்கிறது. இதில் சக்திவாய்ந்த ஜாமர்கள், லேசர் எச்சரிக்கை கருவிகள் மற்றும் 360 டிகிரியில் எதிரி ஏவுகணைகளின் வருகையைக் கண்டறிந்து விமானியை எச்சரிக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இலக்குகளைத் தாக்கவும் பைலட்டுக்கு இது உதவுகிறது. ஃப்ளேர் மற்றும் ஷாஃப்ட் டிஸ்பென்சர்கள் மற்றும் டோட் டெக்காய் அமைப்பு எதிரி ரேடார்களையும் ஏவுகணைகளையும் குழப்பும் திறன் கொண்டவை.
  • RBE-2A ஆக்டிவ் எலக்ட்ரானிக் ஸ்கேன் செய்யப்பட்ட அர்ரே மல்டி மோட் ரேடார் (AESA). இதன் மூலம் 124 மைல் தூரத்திற்கு மேல் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை கண்காணிக்க முடியும். ஒரே நேரத்தில் எட்டு இலக்குகளை குறிவைக்க முடியும். வானில் உள்ள அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்தி, அந்த விவரங்களை விமானிக்கு வழங்குகிறது.
  • ரஃபேலின் விமானி அறை மிகவும் அதிநவீனமானது, இது ஹாலோகிராபிக் காக்பிட் திரை அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக போர் விமானங்களின் கட்டுப்பாடு, பணி தரவு மேலாண்மை மற்றும் ஆயுத ஏவுதல் ஆகியவை மிகவும் எளிதாகும்.
  • பைலட் தலையை குனிந்து கீழே பார்க்க அவசியம் இல்லாமல் முக்கிய தகவல்களை வழங்கும் ஹெட்-அப் டிஸ்ப்ளே சிஸ்டம் இந்த ரஃபேல் விமானங்களில் உள்ளது.
  • விமானத்தில், எதிரி ரேடார் அலைகளை பிரதிபலிக்காமல் தனக்குள் ஈர்த்து விடும் அதிநவீன பூச்சு பயன்படுத்துகிறது.
  • சக்திவாய்ந்த தோட்டாக்களை செலுத்தும் 30 மிமீ பீரங்கி துப்பாக்கி உள்ளது.
  • இது விண்ணிலேயே எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது. தேவைப்பட்டால் சக போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியும்.

நமது தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

  • நமது பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப ரஃபேல் விமானங்களில் இந்தியா பல மாற்றங்களைச் செய்துள்ளது.
  • இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹெல்மெட் பொருத்தப்பட்ட திரை. இது ஆயுதத்தை சிறந்த முறையில் ஏவுவதற்கு பயன்படுகிறது.
  • ராடார் எச்சரிக்கை கருவிகள்
  • குறைந்த அலைவரிசை ஜாமர்கள்
  • 10 மணி நேரம் வரை விமான தரவுகளை பதிவு செய்துகொள்ளும் வசதி
  • அகச்சிவப்பு கதிர்கள் தேடுதல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு.
  • ‘கோல்ட் என்ஜின் ஸ்டார்ட்’ திறன். இது லே போன்ற அதிக உயரங்களில்கூட போர் விமானங்களை நிலைநிறுத்த உதவுகிறது.
  • ஹம்மர் ஏவுகணை அமைப்பு. இது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் எளிதில் அழிக்கும்.

இதன் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்?

  • சிறப்பு ‘டெல்டா’ வடிவ இறக்கைகள் காரணமாக, இந்த போர் விமானம் மிகச் சிறப்பாக சூழ்ச்சிகளைச் செய்ய முடியும். சூப்பர் சோனிக் வேகத்தில்கூட ஒரே இடத்தில் நிலையானதாக இருக்க முடியும்.
  • அதன் தனித்துவமான கட்டமைப்பு, ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் காரணமாக, இது ஒரு முழுமையான பல்நோக்கு போர் விமானமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணில் பாதுகாப்பை அளிக்க முடியும், ராணுவத்திற்கு உதவ முடியும், எதிரிகளின் எல்லைக்குள் ஊடுருவி தாக்க முடியும், உளவு பார்க்கலாம், போர்க் கப்பல்களை அழிக்க முடியும், எதிரி ரேடர்களை ஜாம் செய்யலாம்; மேலும் கடல், நிலம் மற்றும் விண்வெளியில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியும்.
  • அணு ஆயுதத்தை ஏவும் திறனும் ரஃபேல் விமானத்திற்கு உண்டு.

அவை எங்கு நிலைநிறுத்தப்படுகிறது?

  • முதல் படை: அம்பாலாவில் 17 படை (தங்க அம்புகள்)
  • இரண்டாவது படை: மேற்கு வங்காளத்தின் ஹசிமாராவில் 101 படை (ஃபால்கான்ஸ்)
  • இந்தியா ஏற்கனவே ரூ .400 கோடி செலவில், தாங்கள் பயன்படுத்த தேவையான உள்கட்டமைப்பை தயார் செய்துள்ளது.
  • இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 36 போர் விமானங்களில், ஆறு பயிற்சி விமானங்களும் உள்ளடக்கம்.

இதையும் படிங்க: ரஃபேல், இந்தியப் போர் விமானங்களைப் பற்றிய சுருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details