தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

இடஒதுக்கீடு நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் போட்ட "கட்டுப்பாடு" கோடு - உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு தீர்ப்பு

நீதிமன்றம் தனது தீர்ப்பில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கும், மராட்டியர்களுக்காக மகாராஷ்டிரா அரசு அறிவித்த ஒதுக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்தியது. இடஒதுக்கீடு வரம்பை 50 விழுக்காடாக  நிர்ணயித்த 1992 இந்திரா சாவ்னி தீர்ப்பை ஒரு பெரிய அமர்விற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Lakshman Rekha
Lakshman Rekha

By

Published : May 24, 2021, 4:53 PM IST

வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் மராட்டியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து வைத்து, ஒதுக்கீட்டை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பை கூறியுள்ளது. சில கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்பான சட்ட மோதல்கள் நீதிமன்றத்தில் வெடித்தன. கெய்க்வாட் கமிஷன் பரிந்துரைத்தபடி, ஜூன், 2019 இல், பம்பாய் உயர்நீதிமன்றம் ஒதுக்கீட்டை, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை 13 விழுக்காடாகவும், கல்வி நிறுவனங்களில் 12 விழுக்காடாகவும் குறைக்க உத்தரவிட்டது. விசாரணையின்போது,​​ "எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும்?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதன் இறுதித் தீர்ப்பில், மராட்டிய இடஒதுக்கீடு சமத்துவத்தின் கொள்கைகளை மீறியதாக நீதிமன்றம் கூறியது. இதன்மூலம் மராட்டியர்களை சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற மனுதாரரின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கும், மராட்டியர்களுக்காக மகாராஷ்டிரா அரசு அறிவித்த ஒதுக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்தியது. இடஒதுக்கீடு வரம்பை 50 விழுக்காடாக நிர்ணயித்த 1992 இந்திரா சாவ்னி தீர்ப்பை ஒரு பெரிய அமர்விற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவ்வாறு செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றம் இது தொடர்புடைய பல விஷயங்களை தெளிவுபடுத்தியது. நீதிமன்றம் கூறியது போல், கெய்க்வாட் கமிஷனோ அல்லது உயர்நீதிமன்றமோ நாடு முழுவதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மராட்டியர்களுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை மீறுவதற்கான எந்தவொரு சூழ்நிலையையும் உருவாக்கவில்லை.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கம், தலைமுறைகளாக சுரண்டலின் கீழ் தவித்த பிரிவுகளுக்கு தற்காலிக ஆதரவை வழங்குவதாகும். இதன்மூலம் அரசியலமைப்பு நலிந்த பிரிவுகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கியது. அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 70 விழுக்காடு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை ஒரு சில பிரிவுகளுக்கு அளிப்பதை விட அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

நடைமுறையில், அவரது விவேகமான ஆலோசனைக்கு என்ன நடந்தது? மொத்த இடஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தாலும், சக்திவாய்ந்த சமூகக் குழுக்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பிய போதெல்லாம் இடஒதுக்கீடு அரசியல் முன்னுக்கு வந்தது.

சட்டரீதியான தடைகள் மற்றும் ஆட்சேபனைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழகம் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்குகிறது. குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றுகின்றன. சமீபத்தில் மேகாலயா அதன் மக்கள் தொகையில் 85.9 சதவீதம் பழங்குடியினர் என்று கூறி 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தியுள்ளது,

அதிகபட்ச வரம்பை தளர்த்துவது சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும் என்று கூறும் அதே வேளையில், இட ஒதுக்கீடு மட்டும்தான் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு நன்மை பயக்குமா? என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் மாநில அரசுகளிடம் ஒரு நேரடியான கேள்வியைக் கேட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தின் வார்த்தைகளில் சிந்திக்க நிறைய இருக்கிறது.

அரசாங்கங்கள் பிற்படுத்தப்பட்டோர். பட்டியலில் பல சாதிகளை, அந்த சாதிகளின் முன்னேற்றத்திற்காக சேர்த்திருந்தாலும், அத்தகைய சாதிகளின் நலனுக்காக எந்தவொரு திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படையான ரகசியம். மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் விசாரணையின் போது, ​​இலக்கு வைக்கப்பட்ட பிரிவுகளிடையே கல்வியை ஊக்குவிப்பதற்காக கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்று கோரி நீதிமன்றம் மறைமுகமாக அம்சத்தைத் தொட்டது.

நீதிமன்றத்தின் வார்த்தைகள் மாநில அரசுகளால் செயல்படுத்த தகுதியானவை. இடஒதுக்கீடு தேசத்திற்கு சாதகமாக இருக்கும், அவர்கள் சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் சமூக மற்றும் கல்வித் துறைகளில் மக்களைத் தங்கள் காலில் நிற்க வைக்க முடியும்.

ABOUT THE AUTHOR

...view details