டெல்லி: நாட்டில் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், சிறந்த முதலமைச்சர்கள் முதல் நாட்டின் மோசமான முதலமைச்சர்களைப் பகுப்பாய்வு செய்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில் மக்களின் ஆதரவை கவராத மோசமான முதலமைச்சராக முதலிடத்தில் உத்தரகாண்ட் மாநில பாஜக கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பட்டியலிடப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப், தெலங்கானா முதலமைச்சர்கள் முறையே 2, 3, 4ஆம் இடத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, வெறும் 21.91 மக்களின் ஆதரவை மட்டும் பெற்று ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல் இந்தப் பகுப்பாய்வில் நல்ல முதலமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஒடிசா முதலமைச்சரும், இரண்டாம் இடத்தில் டெல்லி முதலமைச்சரும் இடம்பெற்றுள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நான்காம் இடம் வகிக்கிறார்.