தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

காற்று மாசு குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் - மூச்சு திணறல்

66 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு காற்று மாசு தீங்கு விளைவிக்கிறது, நாட்டில் நிகழும் ஒவ்வொரு எட்டு இறப்புகளில் ஒன்றிற்கு காற்று மாசுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகின்றன. இதனையே சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வின் முடிவுகளும் கூறுகின்றன.

காற்று மாசு
காற்று மாசு

By

Published : Aug 2, 2020, 8:02 PM IST

நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேர் வரை சுவாச நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் வெளிவந்த புள்ளிவிவர ஆய்வறிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உயிர் கொடுக்கும் காற்று, நஞ்சாக மாறி நோயை உண்டாக்குவது மட்டுமல்லாமல், வாழ்நாளை குறைப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. சிக்காகோ பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு, சர்வதேச அளவில் காற்று மாசுபாடு, மக்களின் ஆயுட்காலத்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் குறைத்து வருவதாக கூறியுள்ளது.

நம் நாட்டில், மக்களின் ஆயுட்காலம் சராசரியாக 5.2 ஆண்டுகள் குறைந்து வரும் அதே நேரத்தில் வட இந்தியாவில் உயிரிழப்புகள் பத்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. லக்னோ போன்ற நகரங்களில், காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்கள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த வரம்பை விட 11 மடங்கு அதிகமாகும்.

இது பிரச்னையின் தீவிரத்தை நேரடியாகக் குறிக்கிறது. ஒரு நாளைக்கு 22 சிகரெட்டுகளை புகைப்பதன் காரணமாக ஏற்படும் மாசுபாடு அளவிற்கு வடக்கு கொல்கத்தா போன்ற இடங்களில் வாழும் மக்களின் சுவாசத் தரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது? காற்று மாசுபாட்டின் தலைநகராக புகழ்பெற்ற டெல்லியை விட ஜிந்த், பாக்பத், காசியாபாத், மொராதாபாத், சிர்சா, நொய்டாவில் ஆகிய பகுதிகளின் காற்றின் தரம் மிகவும் மோசமானவை, அவை மிகவும் பயமுறுத்துகின்றன.

66 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு காற்று மாசு தீங்கு விளைவிக்கிறது, நாட்டில் நிகழும் ஒவ்வொரு எட்டு இறப்புகளில் ஒன்றிற்கு காற்று மாசுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகின்றன. இதனையே சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வின் முடிவுகளும் கூறுகின்றன.

இந்தியாவில் காற்று மாசுபாடு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோயும் பெரியவர்களுக்கு பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக இதனை கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தரத்தின்படி, ஒவ்வொரு கன மீட்டர் காற்றிலும் உள்ள துகள்கள் பத்து மைக்ரோகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். திறனற்ற மாசு சோதனை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் காரணமாக நாட்டின் பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் மூன்றில் ஒரு பங்கை விஷவாயு அறைகளாக மாற்றிய மாசு கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகத்தினர் மன்னிக்க முடியாத குற்றவாளிகள்.

காற்றின் தரக் குறியீட்டின்படி, தெற்காசியாவின் நான்கு நாடுகளுக்கு அதிகபட்ச அச்சுறுத்தல் உள்ளது, பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மாசுபட்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்ற ஒரு பதிவு ஒட்டுமொத்த தேசத்தையும் வெட்கி தலைகுனிய வைக்கிறது.

காற்று மாசுபாட்டிற்கு எதிராக அண்டை நாடான சீனாவின் பலதரப்பட்ட நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். அங்கு புதிய நிலக்கரி சார்ந்த தொழிற்சாலைகள் உருவாவதை தடைசெய்ததுடன், தற்போது உள்ளவற்றிலிருந்து மாசு வெளியேற்றத்தை தடைசெய்தது. சில எஃகு ஆலைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. வட சீனாவில் புதிய காடுகள் உருவாக்கியதன் மூலம், ஆண்டுதோறும் 25 டன் கரியமில வாயுவை உள்ளிழுத்து, ஒரு நாளைக்கு 60 கிலோகிராம் ஆக்ஸிஜனை வெளியிடுவதன் மூலம் காற்றின் தரத்தை கணிசமாக மேம்படுத்தி, மாசுபாட்டை சரிசெய்கிறது . இங்குள்ள நிலை மிகவும் நேர்மாறானது .

முந்தைய அரசுகளின் விழிப்புணர்வின்மையை சரிசெய்யும் முயற்சியில், மோடி அரசால் முன்மொழியப்பட்ட புதிய 'தேசிய தூய்மையான காற்றுத் திட்டம்' இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எண்ணெய் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு பதில் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது என்ற திட்டத்திற்கு போதுமான ஆதரவில்லை.

மக்களின் ஆதரவும் திரட்டப்பட வேண்டும். தொழில்துறை மற்றும் வாகன மாசுபாடு கண்டிப்பாக சரிபார்க்கப்படுதல், மின்வாகன போக்குவரத்து முறையை படிப்படியாக அறிமுகம் செய்தல், விரிவான சூரிய ஆற்றல் உற்பத்தி போன்றவை செயல்படுத்தப்பட்டால், காற்றின் தரம் மேம்பட்டு தேசத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும்.

இதையும் படிங்க:'ராமராஜ்ஜியம், தர்மத்தை உலகளாவிய செய்தியாக பரப்ப வேண்டும்' - வெங்கையா நாயுடு!

ABOUT THE AUTHOR

...view details