தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2020, 5:03 PM IST

Updated : Jul 15, 2020, 7:03 PM IST

ETV Bharat / opinion

விசா விவகாரம்: 'ட்ரம்பை ஒரு பொருட்டாகக் கருதாத இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை மணி'

மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடனான நேர்காணலில், ஸ்டோனி புரூக் ஊடகப் பள்ளியில் டிஜிட்டல் இனோவேஷன் துறையின் பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீநிவாசன், குடியேற்றக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ட்ரம்பை ஒரு பொருட்டாகக் கருதாத வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை மணியாக விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Student visa
Student visa

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜூலை 6ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டு மாணவர்களிடையே பெரும் குழுப்பம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் கல்விப் படிப்பை மேற்கொள்ளும் வெளிநாடு வாழ் மாணவர்களின் F1 விசாவிலும், தொழிற்கல்வி மாணவர்களின் M1 விசாவிலும் பரிவர்த்தனை பார்வையாளர் திட்டத்தின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான சீன மாணவர்களும் 2 லட்சம் இந்திய மாணவர்களும் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்கள், நடப்பு செமஸ்டரில் மற்ற படிப்புகளை நடத்தாவிட்டால் இம்மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவார்கள்.

இதுகுறித்த முழு தகவல்களுக்காக அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஸ்டோனி புரூக் ஊடகப் பள்ளியில் டிஜிட்டல் இனோவேஷன் துறையின் பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீநிவாசன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசின் இனவாத குடியேற்றக் கொள்கையின் ஒரு அங்கமே விசாவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள். குழப்பத்தை உண்டாக்க வேண்டுமென்றே இவை மேற்கொள்ளப்பட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், நியூயார்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழக பெருநகரக் கலை அருங்காட்சியகத்தின் முன்னாள் முதன்மை டிஜிட்டல் அலுவலராக இருந்தார்.

மற்ற நாட்டவரை விரும்பாத பழமைவாத அமெரிக்க மக்களைத் திருப்திபடுத்தும் நோக்கில் மாணவர், H1B, L1 விசாக்களில் மோசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரிலிருந்து மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுக்கு அவர் அளித்த நேர்காணலில், குடியேற்றக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ட்ரம்பை ஒரு பொருட்டாகக் கருதாத அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை மணியாக விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அவர்கள் எப்போதும் ட்ரம்பின் வாக்கு வங்கியாக இருந்ததில்லை. அமெரிக்க தேர்தலில் உள்நாட்டு அரசியலின் தாக்கம், பல்வேறு முக்கிய அமைதி ஒப்பந்தங்களிலிருந்தும், உலகச் சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிலிருந்தும் அமெரிக்கா வெளியேறிவருவதால் உலகளாவிய ஒழுங்கில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து ஸ்ரீ ஸ்ரீநிவாசன் பேசியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவுடனான நேர்காணலில் ஸ்டோனி புரூக் ஊடக பள்ளியில் டிஜிட்டல் இனோவேஷன் துறையின் பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நேர்காணல்

அதன் நேர்காணல் இதோ..

கேள்வி: F1 விசாவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து விவரிக்கு முடியுமா? நடப்பு செம்ஸ்டரில் ஆன்லைன் வகுப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாறினால் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகுமா?

இது குழப்பத்திற்கான நேரம். ட்ரம்ப் அரசு இதனை தான் செய்துள்ளது. அவர்களின் முக்கிய அம்சமே குழப்பததை உண்டாக்குவதுதான். இந்த குழப்பத்தின் விளைவாக, வதந்திகள், உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகிறது. இனவாத கொள்கைகளை அமல்படுத்த முயற்சிக்கும் அதே நேரத்தில், சுகாதார, பொருளாதார பிரிவில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளதை காண்கிறோம்.

குடியேற்றம் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அனைவரையும் கவலைக்குள்ளாக்கும் வகையில் ட்ரம்பும் அவரது அரசும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனை தெளிவுபடுத்த இதுகுறித்த மேலான தகவல் வரும் என நம்புகிறோம்.

இணை வழி வகுப்புகளை நடத்தாத கல்லூரிகளில் சேர்வது அவர்களுக்கு இருக்கும் மற்றொரு வழியாக உள்ளது. பல் கல்லூரிகள் திறந்து வகுப்புகளை நடத்தவிருப்பது அவர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், செம்ஸ்டர் சிலருக்கு முன்கூட்டியே தொடங்கியிருப்பது கேட்ட செய்தியாக உள்ளது. இதில், குழப்பம் நிலவுவதால் இந்த நடவடிக்கை திரும்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.

குடியேற்றத்திற்கு எதிராகவே அரசு நடந்துகொண்டுள்ளது. குடியேற்ற கொள்கையினாலும், திறமையினாலும் தான் மாணவர்கள் இங்கு வந்து தங்கி சாதிக்க முடிந்தது. தாக்கதைத ஏற்படுத்த முடிந்தது. ட்ரம்பின் நலனுக்காக இது அமையவில்லை. ஐஐடி மாணவர்கள் அவருக்கு தேவையில்லை. ஆனால், இனவெறி குடியேற்ற கொள்கை திட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஐஐடியில் படித்த பொறியாளர்கள், இந்தியர்கள் நினைக்கின்றனர்.

தங்களை அமெரிக்காவில் வைத்து கொள்ளவே ட்ரம்ப் விரும்புவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அப்படி இருக்கவில்லை. இந்திய ஐஐடி பொறியாளர்களை விட நார்வே நாட்டை சேர்ந்த மீனவர்களையே அவர் விரும்புவார்.

கேள்வி: அமெரிக்காவில் உள்ள வெளிநாடு வாழ் மாணவர்களிடையே குறிப்பாக சீன, இந்திய மாணவர்களிடையே எம்மாதிரியான குழப்பம், அச்ச உணர்வு நிலவுகிறது?

பெரும் அச்ச உணர்வு நிலவுவகிறது. அடுத்து என்ன நடக்கும் என மாணவர்களிடையே குழப்பும் ஏற்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பிறகும் கூட விசா அலுவலகங்கள் திறக்கப்படாததால், அதனை பெறுவதற்காக வரும் மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுகுறித்து என்னை தொடர்புகொள்ளும் மாணவர்களை அமைதியாக இருக்கும்படி ஆலோசனை கூறுகிறேன். விசா மாற்றம் குறித்த வழிக்காட்டுதல்கள் வரும் வரை, காத்திருக்கும்படி அவர்களுக்கு அறிவுரை கூறினேன். குழப்பத்தை உண்டாக்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்க இதனை அவர் செய்துள்ளார். இது கொள்கையாக மாறினால்தான் நமக்கு பிரச்னை உண்டாகும். இந்தியர்களுக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கே இது பெரும் பிரச்னையையும் சிக்கலையும் உண்டாக்கும்.

கேள்வி:பல கல்லூரிகளில் நடப்பானிடின் மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது, இதனால் மாணவர்கள் இடமாற்றத்தை கோருவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? நாடுகள் இடையே விமான போக்குவரத்து பெரும் சவாலாக இருக்கும் நிலையில், மாணவர்கள் எவ்வாறு அமெரிக்க சென்றடைய முடியும்?

ஆம், சரிதான். ஆனால் இது ஒரு விபத்து கிடையாது. இது ஒரு நோக்கம் கொண்டது. தற்போதைய பெருந்தொற்று சமயத்தில் யார் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுவது பொதுவானதாகும். இச்சூழல் குறித்து காலமே பதில் சொல்லும். நாம் கணிக்கும் திறனில் இது அடங்கவில்லை.

கேள்வி:எச்1 பி, எல் 1 விசாக்களை இந்தாண்டு இறுதிவரை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியது. குடியுரிமை அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை... இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ஆம். நீங்கள் கூறியது 100 விழுக்காடு சரி. டிரம்ப் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களையும் குடியேறியவர்களையும் எதிரியாக ஆக்கியுள்ளார். ஆனால் ட்ரம்ப் அமெரிக்காவின் 40 விழுக்காடு வாக்காளர்களை; அதாவது நிறவெறி, இனவெறி கொண்ட மக்களை தன் வாக்கு வங்கியாக வைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், அவரை ஆதரிக்கவும், அவருக்காக பொய் சொல்லவும் நிறைய ஊடகங்கள் காத்துக்கிடக்கிறது. எச் 1, எல் 1 விசா முடக்கம் என்பது ஒரு பேரழிவு போன்றது. நாட்டில் வேறு மக்களும் இருக்கிறார்கள், அவர்களின் மதிப்பையும் ட்ரம்ப் உணர வேண்டும். இல்லையேல் அறியா சமயத்தில் பெரும் சிக்கலில் அவர் சிக்கித் தவிக்க வாய்ப்புள்ளது.

இதனை தொலைதொடர்பு, தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றனர். காரணம், அவர்களுக்கு இம்மக்களின் சேவைத் தேவைப்படுகிறது. மேலும், எச் 1 பி விசா தடை செய்வதால், அமெரிக்கர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு கூடும் என்ற அதிபர் ட்ரம்பின் எண்ணம் முட்டாள்தனமானது.

கேள்வி: ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோய் பைடன் பதவிக்கு வந்தால், எச் 1 பி தொடர்பான பிரச்னைகளை களைவார் என எதிர்பார்ப்பு உள்ளதே? மோடி - ட்ரம்ப் உறவை அமெரிக்க சமூகம் எப்படி பார்க்கிறது.

இந்திய சமூகம் என்று யாரும் இல்லை. அது பல்வேறு வகையில் இங்கு பிளவுப்பட்டு கிடக்கிறது. இங்கு அதிபர் ட்ரம்பை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் வரி குறைப்பை ஆதரிக்கும் மக்களும், ஆர்ப்பரிக்கும் மக்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து நல்ல நிலையில் தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர். ஆனால் புதியவர் வருவதை அவர்களும் விரும்பவில்லை.

இதே சூழலிலும் அவரை எதிர்க்கும் வலுவான முற்போக்கு மக்களும் உள்ளனர். இந்த அரசின் விதிமுறைகளை எதிர்த்து போராடுவது யார் என்று பார்த்தால், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் இங்கு சிலர் இருக்கின்றனர். இங்கு யாரும் குழுவாக இல்லை. அனைவரும் பிரிந்து சிதறிக்கிடக்கின்றனர். ட்ரம்ப் பாதிப்பில்லாதவர் என்று நினைத்திருக்கக் கூடிய மக்களுக்கு இதுவொரு கடைசி வாய்ப்பு. அவர்கள் அனைத்தையும் புரிந்து தெரிந்து தெளிவுபெற வேண்டும் என்பதே என் எண்ணம்.

அதிபர் ட்ரம்பின் விசா பயன்களை அனுபவித்த இந்தியர்கள் வேறெதையும் பாராமல் அவருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தருவதென்பது வேடிக்கையானது. வெளிப்படையாக நல்வினைகள் பயக்கும் அதிபர் ட்ரம்ப்பின் திட்டங்கள், மறைமுகமாக பல மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வண்ணமுள்ளது.

ட்ரம்ப் அரசு மக்கள் கண்களை மறைத்து அனைத்தையும் மூடிமறைக்கப் பார்க்கிறது. அவரின் சர்வாதிகார போக்கு மக்களுக்கு என்றும் நன்மைப்பயக்காது. ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை திரட்டி அவர்களை மட்டும் நம்பி தேர்தல் மேடையில் வீற்றிருப்பதை மக்கள் அறிந்துணரவேண்டும். கொரியாவில் அமெரிக்காவை விட மக்கள் அதிகம் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு 200 கரோனா மரணங்கள் கணக்கிடப்பட்ட நேரத்தில், அமெரிக்காவில் 50ஆயிரம் மரணங்கள் கணக்கிடப்பட்டது. எதிலும் அதிபர் ட்ரம்புக்கு சிந்திப்புத் திறன் குறைவு.

அனைத்து விதமான வழிமுறைகளையும் கையாள ஏதுவான சூழல் இருந்தாலும், அதனை செயல்படுத்தாமல் ட்ரம்ப் ’தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்பதுபோல நடந்துகொள்வது அநாகரீகமானது.

கேள்வி: பள்ளிக் கல்லூரிகளை திறக்க வேண்டும் என்றும் அது திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் அனைவரும் சோம்பேறியாகி உள்ளனர் என்று ட்ரம்ப் கூறியிருப்பது.

இது அவசையமானதாக தெரியவில்லை. அவர் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க சொல்லவில்லை. மாறாக அந்தந்த பகுதி ஆளுநர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நாட்டில் கரோனா தொற்று அதிபயங்கரமாகப் பரவி வருகிறது. அதன் அபரிவித பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அரசியல் அதாயம் தேடச் சென்று இங்கு மக்கள் பெரும் இன்னலில் சிக்கியுள்ளனர். ஒரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு இங்கு தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கத்தின் போது மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு விலையில்லாமல் போனது.

கேள்வி:உலகம் ஒரு பெருந்தொற்றை எதிர்கொண்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா நழுவியது எந்த வகையில் அவர்களுக்கு பலன் தருவதாக அமையும். இதனை விமர்சித்து அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து வருவதை நம்மால் காணமுடிகிறது. இதனையடுத்து ஜேசிபிஓஏ, பாரிஸ் காலநிலைச் சட்டம் ஆகியவற்றிலிருந்தும் அமெரிக்கா தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. உலக நாடுகளின் ஒத்த கருத்து என்ற அடிப்படை இங்கு நிலைகொண்டுள்ளதா?

அவர் அவருக்கான சில திட்டங்களை மனதில் வைத்துக்கொள்வார். நாம் எதிர்பார்த்திருப்பதை அவர் என்று செய்யமாட்டார். முதலில் அவர் விளையாட்டு நபராகப் பார்க்கப்பட்டார். ஆனால் ஆடியமைத்தப் பிறகு அப்படியில்லை. இதை செய்வார், அதை செய்வார் என்று எண்ணி தற்போதுள்ள இக்கட்டான சூழலில் வந்து நிற்கிறோம்.

Last Updated : Jul 15, 2020, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details