தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

சாலை பாதுகாப்பு: வாழ்க்கை விலை மதிப்பற்றது, ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது! - இந்தியாவில் சாலை விபத்துகள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் சாலைகளில் உயிரிழக்கின்றனர். ஒரு நாளைக்கு 400 பேர் இறக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் தோராயமான கணக்கீட்டின் படி உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 13.50 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். அதில் இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் 11 விழுக்காடாக இருக்கிறது.

சாலை பாதுகாப்பு
சாலை பாதுகாப்பு

By

Published : Feb 3, 2021, 7:45 PM IST

சாலை பாதுகாப்பு என்பது தொடர்ந்து ஒரு முக்கியமான விவகாரமாக, பொது சுகாதாரத்திற்கு சிக்கலாக மற்றும் உலகம் முழுவதும் நிகழும் மரணத்துக்கு மற்றும் காயத்துக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் பேர் சாலைகளில் உயிரிழக்கின்றனர். ஒரு நாளைக்கு 400 பேர் இறக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் தோராயமான கணக்கீட்டின் படி உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 13.50 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். அதில் இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் 11 விழுக்காடாக இருக்கிறது.

சாலை பாதுகாப்பு மாதத்தின் தொடக்க விழாவின் போது பேசிய மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு நாளும் இந்திய சாலைகளில் 415 பேர் உயிரிழப்பதாக கூறியுள்ளார். மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சாலை பாதுகாப்பு மாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குடன் சேர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்க, அவர்களுடன் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

“2030ம் ஆண்டு வரை நாம் காத்திருந்தால், அப்போது சாலை விபத்துகளில் மேலும் 6 முதல்7 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும். 2025 ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள் மற்றும் மரணங்களில் 50 விழுக்காடாக குறைக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வலியுறுத்தினார்.

2019ம் ஆண்டு சாலை விபத்து அறிக்கையின்படி அந்த ஆண்டில் மட்டும் 4,49,002 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகள் வாயிலாக 1,51,113 பேர் உயிரிழந்தனர். 4,51,361 பேர் காயமுற்றனர். சாலை விபத்து மரணங்களில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பணியாற்றும் குழுவை சேர்ந்தவர்கள் 84 விழுக்காட்டினர் உயிரிழந்திருக்கின்றனர்.

படுகாயம் அடைந்தோர் மற்றும் உயரிழந்தோரில் 54 விழுக்காட்டினர் இரு சக்கரவாகனங்களில் பயணித்தோர், சைக்கிள்களில் பயணித்தோர், முதன்மையான பாதசாரிகள் என பாதிக்கப்படக்கூடிய சாலைகளைப் பயன்படுத்துவோராக இருந்தனர்.

சாலை பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒரு பொது சமூக அமைப்பான நுகர்வோர் குரலின் தலைமை செயல் அலுவலரான அஷிம் சன்யால், சாலை பாதுகாப்பு என்பது அரசு மற்றும் குடிமக்கள் என்ற இருதரப்பிலும் கூட்டுப் பொறுப்புடமை கொண்டதாகும். ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒரு மரணம் என்ற நிலையில் சிறியதோ அல்லது பெரியதோ என்று கருதாமல் ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாழ்க்கையும் விலை மதிப்பற்றது என்று கூறினார்.

பல்வேறு அபாய காரணிகள்

தலைக்கவசம்

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் 44,666 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் 2019ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்து மரணங்களில் இது 29.82 சதவிகிதமாகும். அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் படி உயிரிழந்தோரில் 30148 பேர் இரு சக்கரவாகன ஓட்டிகளாவர்.

சாலை விபத்து மரணத்துக்கு தலையில் ஏற்பட்ட காயமே முக்கிய காரணமாக இருந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் உபயோகிப்பவர்களிடையே காயம் ஏற்படுவது மட்டுமின்றி உடல் ஊனமும் ஏற்படுகிறது. பெரும்பாலான இருசக்கர வாகன ஒட்டிகள் தலைக்கவசம் அணிவதில்லை. அவர்களில் யாராவது ஒருவர் தலைக்கவசம் அணிந்து செல்லும் பட்சத்தில் அதுவும் மோசமான தரத்துடன் இருக்கிறது. நல்ல தரமான அதிக விலை கொண்ட தலைக்கவசங்கள் உபயோகிக்கப்பட்டிருந்தால் அவர்களின் தலைக்காயம் ஏற்படாமல் தப்பித்திருக்கும் அல்லது காயத்தின் தீவிரத்தன்மை குறைவாக இருந்திருக்கும்.

அதிவேகம்

5 கோடிக்கும் மேற்பட்ட நகரங்களில் அதிக வேகம் என்பது முக்கியமான போக்குவரத்து விதிமீறலாக இருக்கிறது. மேலும் 53,366 சாலை விபத்துகளுக்கு(64.5%) காரணமாக இருந்திருக்கிறது. மத்திய அரசு அறிக்கையின் படி, தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் அனைத்து சாலை விபத்துகளிலும் சராசரியாக 71.6 சதவிகித விபத்துகள் அதிக வேகம் காரணமாக நிகழ்ந்துள்ளன.

தகுதி வாய்ந்த ஓட்டுநர் உரிமம் இன்றி அதிக வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்கள் எண்ணிக்கை 2018 ம் ஆண்டு 37,585 ஆக இருந்தது. இது 2019ம் ஆண்டு 44358 ஆக அதிகரித்தது.

சீட் பெல்ட்

இரு சக்கரவாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் அல்லாத வாகனங்களில் ஓட்டுநர், பயணிப்பவர்கள் இருதரப்பினரும் அணிய வேண்டிய பாதுகாப்பு கருவி சீட் பெல்ட் ஆகும். எனினும், இப்போது கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஏர்பேக்குகளால் வழங்கப்படும் பாதுகாப்பு என்பது சீட் பெல்ட் அணியாதபட்சத்தில் தின்ன் கொண்டதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 2019 ம் ஆண்டு சீல் பெல்ட் அணியாமல் சென்றவர்களில் 20,885 பேர் உயிரிழந்துள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மொத்த சாலை விபத்துகளில் இது 13.82 சதவிகிதமாகும். இதில் 9,562 ஓட்டுநர்களாலும், 11,32 பயணிகளாலும் ஏற்பட்ட விபத்துகளாகும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்

2019ம் ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் சாலையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியவர்களால் 9,200 பேர் உயிரிழந்தனர். இது போன்ற நான்கில் ஒரு பங்கு மரணங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன. இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் 2,376 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் உயிரிழந்திருக்கின்றனர்.

மொபைல்போன் உபயோகிப்பதால் விபத்துகள்

ஓட்டுநர்களின் கவனம் சாலையை விட்டு விலகுவதற்கு மொபைல் போன் உபயோகிப்பது காரணமாக இருக்கிறது. மொபைல் போன் உபயோகிப்பதால், ஸ்டீரிங் வீலில் இருந்து அவர்கள் கைகளை எடுத்து விடுகின்றனர். அவர்களின் மனமும் சாலையில் இருந்து விலகி விடுகிறது. சூழலையும் அவர்கள் மறந்து விடுகின்றனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் அல்லது போதை மருந்து & மது அருந்துதல், சாலையில் உள்ள சிவப்பு விளக்கு எச்சரிகைகளை புறம் தள்ளிவிட்டு ஓட்டுதல், மொபைல் போன்கள் உபயோகிப்பது ஆகியவற்றால் மொத்த விபத்துகளில் 6.0 சதவிகித விபத்துகளும், மொத்த மரணங்களில் 8.0 சதவிகித மரணமும் நிகழ்கின்றன.

சாலையில் செல்லும்போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாதாதும்

  • எப்போதுமே பாதசாரிகளுக்கும், குழந்தைகளுக்கும் முதலிடம் கொடுக்கவும்
  • அனைத்து விளக்குகளும் வேலை செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்
  • நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தும்போது ஆபத்தான விளக்குகளை அணைத்து வைக்கவும்.
  • வாகனத்தின் பின்புறத்தில் பிரதிபலிப்பு விளக்குகளை உபயோகிக்கவும்
  • வாகனத்தின் பிரேக்குகள் மற்றும் டயர்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
  • சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடியுங்கள்
  • எப்போதுமே சீட் பெல்ட் அணியுங்கள்
  • அவசரப்பட்டு பயணிக்க வேண்டாம். பாதுகாப்பான பாதையில்பயணியுங்கள்.
  • பனிமூட்டத்தில் பயணிக்க வேண்டாம். இது போன்ற சிக்கலான வானிலைகளில் பயணிப்பதை தவிர்க்கவும்.
  • சாலையின் வடிவைப்புக்கு ஏற்ப வழிகாட்டும் வழிகாட்டி பலகை அறிவிப்புகளை எப்போதும் கவனமாக படிக்கவும். அதில் கூறப்பட்டுள்ளபடி வாகனத்தின் வேகத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

ABOUT THE AUTHOR

...view details