கரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவதால், நேபாளம் அதன் இரண்டு மாபெரும் அண்டை நாடுகளிடமிருந்து கோவிட்-19 தடுப்பூசியை பெருமளவில் பெறும் முயற்சியில் காத்மாண்டுவில் உள்ள இந்திய மற்றும் சீன தூதர்களுடன் தீவிரமாக பேசி வருகிறது.
சினோபார்ம் உருவாக்கிய தடுப்பூசிகளை சீனாவிலிருந்து பரிசாக பெற்ற போதிலும், நேபாளம் தனது பெரும்பான்மை மக்களுக்கு ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து கிடைக்கும் தடுப்பூசிகள் அதற்கு முக்கியமானவை.
சீரம் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியா மானியமாக அளித்த நிலையில், ஜனவரி 27 அன்று நேபாளம் தனது தடுப்பூசி விநியோகத்தை தொடங்கியது.
விரைவில், நேபாளம் சீரம் நிறுவனத்திடமிருந்து அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசியை வாங்கவுள்ளது. மேலும் வளர்ச்சி குறைந்து நாடுகளுக்கு தடுப்பூசிகளை உறுதி செய்யும் விதமாக உலக சுகாதார அமைப்பின் முயற்சியால் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கோவாக்ஸ் வசதியின் கீழ் காத்மாண்டுவிற்கு வந்தது.
இவை அனைத்தும் சுகாதார ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய குழுக்களைச் சேர்ந்த 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட நேபாளத்திற்கு உதவியது.
இரண்டாவது கட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடிய அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட நேபாளம் திட்டமிட்டுள்ளது. உடனடியாக, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவிடமிருந்து அதிகமான பெறுவதற்கு காத்திருக்கும் அதேவேளையில், பெய்ஜிங்கில் இருந்து தடுப்பூசிகளை பெற நேபாளம் முயற்சித்து வருகிறது.
சமீபத்தில் டெல்லி மற்றும் காத்மாண்டுவில் பெய்ஜிங்கின் தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நேபாள சுகாதார அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி, 800,000 டோஸ் சினோஃபார்ம் உருவாக்கிய தடுப்பூசிகளை சீனாவின் பரிசாக கொண்டு வர இந்த வாரம் சீனாவுக்கு ஒரு விமானத்தை அரசாங்கம் அனுப்புகிறது என்று கூறினார்
ஆனால் அது மட்டுமே போதாது. நேபாளத்திற்கு கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்களில் 20 மில்லியனுக்கு ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் அடுத்த ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும்.
இந்திய சீரம் நிறுவனம் நேபாளத்தின் கோவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசி திட்டங்களுக்கு உதவும் என்று சுகாதார அமைச்சர் ஹிருதயேஷ் திரிபாதி கருதுகிறார். இது குறித்து setopati.com டிஜிட்டல் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசி விநியோகத்தைப் பொருத்தவரை, நேபாளம் சீரம் நிறுவனத்துடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் எங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கியது, மேலும் இந்த சமயத்திலும் எங்களுக்கு போதுமான கோவிஷீல்ட் தடுப்பூசியை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறினார்,
நேபாளம் ஒரு நியாயமான விலையில் தடுப்பூசிகளை பெற விரும்புகிறது. ஆரம்பத்தில், சீரம் நேபாளத்திற்கு கோவிஷீல்ட் ஒரு டோஸுக்கு 4 அமெரிக்க டாலர் வசூலித்தது. மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இது நியாயமான விலை என்று அதிகாரிகள் நினைக்கின்றனர்.
மேலும் கோவிஷீல்ட் விநியோகங்களுக்கு காத்திருக்கும்போது, கோவிஷீல்ட் விலை உயர்ந்ததுள்ளது குறித்து நேபாள சுகாதார அலுவலர் சற்று வருத்தப்படுகிறார்கள். இப்போது கோவிஷீல்டின் விலை நேபாளம் ஆர்டர் செய்ய விரும்பும் புதிய விநியோகத்திற்கு ஒரு டோஸுக்கு 5 அமெரிக்க டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
"சப்ளை செய்யும் முகவருக்கு 10 விழுக்காடு தரகு கட்டணம் இருப்பதால் சற்றே விலை உயர்ந்துள்ளது. நாங்கள் அந்த வகையான தரகு கட்டணத்தைத் தவிர்க்க முயற்சிக்கிறோம். அதனால்தான் சிறிது தாமதம் ஏற்படுகிறது.” என்று சுகாதார அமைச்சர் திரிபாதி மேலும் கூறினார்.
மார்ச் 15 நிலவரப்படி, நேபாளம் 2.2 மில்லியனுக்கும் அதிகமான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியது. இதுவரை 275,000 உறுதிப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் தொற்றுகளை பதிவு செய்தது, 3,014 பேர் இறந்துள்னர். இப்போது, முக்கியமாக இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து திரும்பும் மக்களிடையே புதிய கரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில், அது குறித்த அச்சங்கள் அல்லது இரண்டாவது அலை குறித்த அச்சங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது.