காளை அடக்கும் விளையாட்டின் பல வடிவங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஜன.16) மதுரை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அசாம் மாநிலத்தில் மோரிகான் மற்றும் நாகானில் காளை சண்டை வெள்ளிக்கிழமை (ஜன.15) நடத்தப்பட்டது
காவிரி டெல்டா, சில மேற்கு பகுதி, மற்றும் தெற்கில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் 'வாடி வாசல்' என்று அழைக்கப்படும் நுழைவாயில் வழியாக அரங்கிற்குள் நுழைகின்றன. காளையை அடக்கும் நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு (30 வினாடிகள்), அல்லது மூன்று சுற்று அல்லது போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்ட தூரம் வரை காளையின் திமிலை பிடித்திருக்க இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால், அவர்காளை அடக்கியதாகக் கருதப்படுகிறது, மேலும் காளைகளைத் அடக்குபவர்களுக்குப் பரிசு பொருட்களாக வீட்டு உபயோக பொருட்கள் முதல் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு ஒரு கார் வரையிலான பரிசுகள் அளிக்கப்படும். அசாம் காளை சண்டைகளில் இதுபோன்று இல்லை, இதில் எருமைகள் ஒன்றோடொன்று கொம்புகள் மூலம் சண்டையிட்டு மற்றொன்றை காயப்படுத்தி அரங்கிலிருந்து துரத்த முயற்சிக்கின்றன.
முந்தையது பண்டைய தமிழ் கலாச்சாரமாக காளைகள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் போல் வளர்க்கப்படுகிறது. அசாமில் எருமை சண்டை என்பது ஒரு வழக்கம் என்று கூறப்படுகிறது, இந்தப் போட்டிகளால் எருமைகள் அசாதாரண வலிமையைப் பெறுகின்றன என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மாதமான தையில் அறுவடை பண்டிகையின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும். மதுரையில் அலங்காநல்லூர் உட்பட மூன்று முக்கியப் போட்டிகள் கோயில் மைதானத்தில் நடைபெற்றாலும், விளையாட்டு மதச் சார்பற்றதாகவே உள்ளது. தேவாலயங்களும், ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்கின்றன.