அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 2017 உலகளாவிய நோய்ப் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 183 நாடுகளுக்கான எதிர்கால உலகளாவிய தேசிய மக்கள் தொகை; அவற்றின் இறப்பு, கருவுறுதல், இடம்பெயர்வு விகிதங்களை திட்டமிட புதிய மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டு, இந்த பகுப்பாய்வை ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.
அதனடிப்படையில் மக்கள் தொகையில் 2100-க்குள் சீனா, இந்தியா, நைஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பல நாடுகள் போட்டியிடுவதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை 2048ஆம் ஆண்டில் 160 கோடியாக உயரும் என்றும்; அதுவே 2100ஆம் ஆண்டில் 32 விழுக்காடு குறைந்து 109 கோடியாகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.