தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

தண்ணீர் பாதுகாப்பிற்கு இந்தியாவில் ஒரு மக்கள் இயக்கம் தேவை! - இந்தியாவில் தண்ணீர் பாதுகாப்பு

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடனேயே, பிரதமர் மோடி மழை நீர் சேமிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டின் அனைத்து கிராம தலைவர்களுக்கும் 12 மொழிகளில் தனிப்பட்ட கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். தற்போது அவர்  100 நாள் வேலைதிட்டத்தின் ஒரு பகுதியாக தண்ணீரைப் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தண்ணீர் பாதுகாப்பு
தண்ணீர் பாதுகாப்பு

By

Published : Mar 5, 2021, 5:01 PM IST

அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் தேவையாக இருப்பதால், ஒவ்வொருவரும் தண்ணீரை ஒரு விலைமதிப்பற்ற வளமாக கருத வேண்டும். இந்த உணர்வு இல்லாததால், கடுமையான மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீர் பற்றாக்குறை நாட்டின் கண் முன்னே தெரிகிறது.

2030ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் 60 விழுக்காடு மக்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்றும் நீர் கிடைப்பதை ஒப்பிடும்போது தேவை இரு மடங்காக இருக்கும் என்றும் நிதி ஆயோக் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எச்சரித்திருந்தது.

நாட்டின் 70 விழுக்காடு நீர்வளங்கள் மாசடைந்து வருவதாகவும், இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்த சூழ்நிலையின் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு இழப்பை நாடு சந்தித்து வருவதாகவும் ஆயோக் நடத்திய ஆய்வில் தெரியவந்தது

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடனேயே, பிரதமர் மோடி மழை நீர் சேமிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டின் அனைத்து கிராம தலைவர்களுக்கும் 12 மொழிகளில் தனிப்பட்ட கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். தற்போது அவர் 100 நாள் வேலைதிட்டத்தின் ஒரு பகுதியாக தண்ணீரைப் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் தனது சமீபத்திய மன் கி பாத்தில், ஜல் சக்தி அமைச்சகம் நீர் பாதுகாப்பு தொடர்பான பரப்புரையை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். நீர் பாதுகாப்பிற்கான மோடியின் இந்த செய்தி 2003ஆம் ஆண்டில் வாஜ்பாயின் முன்முயற்சியை நினைவூட்டுகிறது. தண்ணீரைப் சேமிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய தெலுங்கு மாநிலத்தின் ஜலயாகம் இயக்கம், தேசத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மக்களை அதில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தார்.

ஆறுகள், நீர்ப்பாசன ஏரிகள் மற்றும் குளங்கள் போன்றவற்றில் நீர் பாதுகாப்பிற்கு செலவு குறைந்த தொழில்நுட்பத்தை உருவாக்க அறிவியல் சமூகம் செயல்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இருப்பினும், தொடர் நடவடிக்கை இல்லாததால், விலைமதிப்பற்ற நீர்வளங்கள் புறக்கணிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் அபாயமணி ஒலிக்க தொடங்கி விட்டது.

புவி வெப்பமடைதலால் பருவநிலை ஒழுங்கற்றதாக உள்ளது. இதன் விளைவாக, இதுவரை வறட்சி என்று அறியப்பட்ட பகுதிகளில் கூட வெள்ளம் காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்ற மக்கள் உறுதியுடனும் ஒற்றுமையாகவும் செயல்பட்டால் தான் இந்த சோகங்களும் கண்ணீரும் மாறும்.

நீர்ப்பாசனத் ஏரிகளையும் நீர் ஆதாரங்களையும் வண்டல் படியாமல் வைத்திருப்பதன் முக்கியத்துவம் பல இந்திய மொழிகளில் கூறப்பட்டுள்ளது. நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கான புரிதல் பண்டைய காலங்களிலிருந்து தொடர்கிறது.

உலக மக்கள் தொகையில் இந்தியாவில் 18 விழுக்காடு பேர் உள்ளனர். உலகின் உள்ள கால்நடைகளில் கிட்டத்தட்ட 18 விழுக்காடு இந்தியாவில் உள்ளது. ஆனால் உலகின் குடிநீர் ஆதாரங்களில் 4 விழுக்காடு மட்டுமே நாட்டில் கிடைக்கிறது. நீர் ஆதாரங்களை கவனக்குறைவான அழிப்பது மற்றும் நிலத்தடி நீரை அதிகமாக சுரண்டுவது போன்றவை ஆண்டுதோறும் நீர் பற்றாக்குறையை அதிகரிக்க செய்கிறது.

ஒரு ஆண்டு பெய்யும் மழையின் 70 விழுக்காடு 100 நாட்களில் பெய்து வருவதால், மழை நீரை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து எந்த ஒரு திட்டமும் இல்லை. ஆண்டின் பிற்பகுதியில் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய எந்த திட்டமும் இல்லாததால் நாட்டின் ஆபத்தான எதிர்காலம் கண்முன்னே தெரிகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டில் தனிநபருக்கு கிடைக்கும் நீர் 5000 கன மீட்டராக இருந்தது. இன்று அது 1486 கன மீட்டராக குறைந்துள்ளது. 2031ஆம் ஆண்டளவில், தனிநபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 1367 கன மீட்டராக மேலும் குறையும். குறையப்போவது நீரின் அளவு மட்டுமல்ல, கிடைக்கும் நீரின் தரமும் பாதிக்கப்படும்.

இந்த சூழ்நிலையை சரிசெய்ய யாராவது வருவார்கள் என்ற மனநிலையிலிருந்து மக்கள் மாற வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு 4 லட்சம் கோடி கன மீட்டர் மழை பெய்கிறது. இருப்பினும் அந்த மழைநீரில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பயன்படுத்த முடிகிறது. நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி கன மீட்டர் மழைநீரைப் சேமித்து, நீர் வளத்தில் இந்தியா சுயசார்பு அடைய முடியும்.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இஸ்ரேலில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மழை நீர் உள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக அமைத்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்தான சூழ்நிலையைத் தவிர்க்க முடிந்தது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதில் இஸ்ரேலின் வெற்றிக் கதையிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் உள்ளது. கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படும் பாகீரத முனிவரைப் போலவே, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீர் பாதுகாப்பிற்கு தவத்தை செய்ய வேண்டும். நாட்டில் ஏராளமான நீர் மற்றும் பயிர் விளைச்சல் இருக்க வேண்டுமென்றால், நீர் சேமிப்பு என்பது ஒரு மக்கள் இயக்கமாக வடிவெடுக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details