எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின் (ONGC) ஆராய்ச்சி பிரிவு கிழக்கு லடாக்கிலிலுள்ள பூகா பள்ளத்தாக்கு மற்றும் சுமாதாங் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
பல அரிய வகை யுரேனியம், லாந்தனம், கடோலினியம் மற்றும் மதிப்புமிக்க பல உலோகங்கள் இப்பகுதியில் இருக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிகவும் மதிப்புமிக்க தாதுக்கள் நிறைந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியா-சீனா எல்லை மோதலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. ஓஎன்ஜிசி-இன் இந்த கண்டுபிடிப்புகளின் நகல் நமது ஈடிவி பாரத்-திற்கு கிடைத்ததுள்ளது.
இருப்பினும் ஆராய்ச்சி முடிவுகளில் எந்த வகையான உலோகம் எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் தரப்படவில்லை.
இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இரு நாட்டு ராணுவங்கள் மோதிய சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், குளிர் காலத்தில் நீண்ட காலம் தங்குவதற்கு ஏற்ப இரு படைகளும் பள்ளங்களை தோண்டிவருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மிகவும் அரிதான பூமியை பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளன, அவை தற்போதுள்ள வளர்ந்து வரும் ஆற்றல், அறிவியல் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அரிதான உலோகங்கள் கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கேமராக்கள், சோலார் பேனல்கள், மின்சார கார்கள், செயற்கைக்கோள்கள், போர் விமான இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் இன்றியமையாதவை.
ஓஎன்ஜிசி நடத்திய முதற்கட்ட ஆய்வு 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், புவியியல் ஆய்வு மையமும், (GSI) “லடாக் பகுதியில் மிகவும் நம்பகமான புவிவெப்ப பகுதிகள் உள்ளன” என்று கூறியுள்ளது.