தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

பிகாரை வெல்லப்போவது யாரு? நிதிஷின் பொருளாதார சாதனைகள் என்னென்ன?

பிகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை தொடங்கும் நிலையில், மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்த பொருளாதார சாதனைகள் என்னென்ன என்பது குறித்து எழுத்தாளர் பிராஜ் மோகன் சிங் விவரிக்கிறார்.

Braj Mohan Singh  பிராஜ் மோகன் சிங்  பிகாரை வெல்லப்போவது யாரு  நிதிஷின் பொருளாதார சாதனைகள் என்னென்ன  பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020  Could Nitish have done better on the economic front?  Bihar 2020  நிதிஷ் குமார்  Nitish Kumar
Braj Mohan Singh பிராஜ் மோகன் சிங் பிகாரை வெல்லப்போவது யாரு நிதிஷின் பொருளாதார சாதனைகள் என்னென்ன பிகார் சட்டப்பேரவை தேர்தல் 2020 Could Nitish have done better on the economic front? Bihar 2020 நிதிஷ் குமார் Nitish Kumar

By

Published : Oct 27, 2020, 10:35 PM IST

பாட்னா: பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனினும், முதலமைச்சர் நிதிஷ் குமார் தன்னம்பிக்கை நிறைந்ததாகத் தெரியவில்லை.

நிதிஷ் குமார் கடந்த 10 ஆண்டுகளாக செயல்திறன் “வளர்ச்சி” மற்றும் “நல்லாட்சி” என்ற இரண்டு முழக்கங்களை கொண்டிருந்தார்.

ஆனால் 2020 தேர்தல் ஒரு வித்தியாசமான காட்சியை முன்வைக்கிறது. 15 ஆண்டுக்கால ஆட்சியில் நிதிஷ் குமார், பிகாரை நாசப்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

தற்போது நடப்பது காட்டாட்சி. மின்சாரம், சாலை வசதிகள் கிடைக்காமல் தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டனர் என்றும் அவர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால் பிகாரின் நிலை மிகவும் மோசமாக இருந்தபோது நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்தார். அந்த நேரத்தில், நிதிஷ் குமாரிடமிருந்து மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. மக்கள் நிதிஷ்குமார் கையில் ஒரு மந்திரக்கோலை வைத்திருப்பதாக நினைத்தார்கள், அதனுடன் அவர் ஒரே இரவில் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்றும் நம்பினார்கள்.

அத்தகைய அதிசயம் எதுவும் நடக்கவில்லை என்பது வெளிப்படை. பிகாரை அவர், மாற்ற முயற்சித்த போதிலும் அந்த மாற்றம் உண்மையில் நடக்கவில்லை. தற்போது நிதிஷ் குமாரின் உருவம் சிதைக்கப்படுகிறது.

அவர் ஒரு கைதியாகி விட்டார் என்பதே நிதர்சனம். பிகாரின் வளர்ச்சி என்று அவர் பேசினால், ஏன் மாநிலத்தில் தொழில்கள் வரவில்லை என்று மக்கள் விமர்சிக்கின்றனர்.

தொழில்துறை முதலீடு பிகாரிற்கு ஏன் வரவில்லை?

பிகாரில் ஏன் முதலீடு வரவில்லை? கல்வியைத் தொடர இளைஞர்கள் ஏன் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்?

நிலங்கள் கையகப்படுத்தலில் கட்டுப்பாடுள்ள மாநிலமாக இருப்பதால் பிகார் வர தொழில்கள் தயங்குகின்றன என்ற நிதீஷ் குமாரின் விளக்கத்தை இன்றைய இளைஞர்கள் நம்பவில்லை.

பிகாரின் வளர்ச்சி குறித்த கூற்றுக்கள் வெற்றா?

நிதிஷ் குமாரின் ஆட்சியின் போது பிகார் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து நடக்கும்போது மிகப்பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுவும் பொய்த்துபோனது. நிஜத்தில் நேர்மாறாக நடந்தது. பிகாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து மற்ற மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்தங்கியிருக்கிறது. ஒருங்கிணைந்த ஜனதா தளம், பாஜக ஆட்சியில் மாநில வளர்ச்சி 6.16 சதவீதமாக உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி 7.73ஆக உள்ளது.

பிகார் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடைய முடியுமா?

பொருளாதார விவகாரங்களைப் பற்றி அறிந்தவர்களின் கூற்றுப்படி, தரைமட்ட யதார்த்தத்தை விட விளம்பரத்திற்காக அதிக சாதனை கோரப்பட்டன.

2019இல் பிகாரின் வளர்ச்சி விகிதம் தேசிய அளவில் 11 சதவீதத்திற்கு எதிராக 15 சதவீதமாக இருந்தது என்று கூறப்பட்டது.

பிகாரின் வளர்ச்சி விகிதம் எப்போதுமே தேசிய மட்டத்தை விட அதிகமாக இருந்தால், அதன் தனிநபர் வருமானம் எவ்வாறு பல ஆண்டுகளாக ஒன்றாக நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது. 2017-18 ஆம் ஆண்டில், பிகாரில் தனிநபர் வருமானம் வெறும் ரூ .42,742 ஆக இருந்தது.

மேலும் இது 2018-19ல் ரூ .47,541 ஆக உயர்ந்துள்ளது, இது கிட்டத்தட்ட ரூ.5,000 அதிகரித்துள்ளது. ஆனால் இதை நாம் தேசிய தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மை தெளிவாகிறது. நாட்டின் தற்போதைய தனிநபர் வருமானம் ரூ..92,565 ஆக உள்ளது. இது பிகாரின் வருமானத்தை விட இரு மடங்காகும்.

பிகார் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், அதன் ஹெக்டேருக்கு உற்பத்தித்திறன் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. பிகாரில், ஒரு ஹெக்டேரில் 1679 கிலோ தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தேசிய அளவிலான சராசரி ஹெக்டேருக்கு 1739 கிலோ ஆகும். விவசாயத்தில் அதிக முதலீடு இருந்திருந்தால் உற்பத்தித்திறன் அதிகரித்திருக்கும்.

அரசியல் ஆய்வாளர் டாக்டர் சஞ்சய் குமார் கூறுகையில், சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டதால் பிகார் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிகார் விவசாயிகள் தங்கள் கரும்பு விளைபொருள்களை விற்க உத்தரப் பிரதேசம் செல்ல வேண்டும்.

மேலும், சணல், சிமெண்ட் மற்றும் காகித ஆலைகள் மூடப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. நிதிஷ் குமார் சில மேம்பாட்டுப் பணிகளைச் செய்தார், ஆனால் வேளாண் தொழில்களை ஊக்குவிக்க எதுவும் இல்லை” என்றார்.

பொருளாதார நிபுணர் டாக்டர் பக்ஷி அமித்குமார் கூறுகையில், “பிகார் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால் முதலீட்டை ஈர்க்க முதலில் சாலைகள், நீர் மற்றும் மின்சாரம் வழங்குவது அவசியம்.

பிகாரில் ஏற்பட்ட மிக மோசமான விஷயம் என்னவென்றால், அடிப்படை உள்கட்டமைப்பு எதுவும் இல்லை. 1990ஆம் ஆண்டு காலத்தில், தொழில்துறை வளர்ச்சி விகிதம் மைனஸ் இரண்டு ஆகும். மேலும், தொழிலதிபர்களின் பார்வையில், பிகாரின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக இருந்தது.

இதற்கு காரணமான வரலாற்று காரணிகளை பிகார் முதல்மைச்சர் நிதிஷ்குமார் குற்றஞ்சாட்டினார். உதாரணமாக, பிகார் மாநிலத்தை பிளவுபடுத்தியதிலிருந்து பிரச்னைகளை எதிர்கொள்ளத் தொடங்கியது.

பிகார் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அதன் அனைத்து கனிம உற்பத்தி பகுதிகளும் ஜார்க்கண்டிற்குச் சென்றது. இதன் காரணமாக பிகார் தாதுக்களை இழந்தது மட்டுமல்லாமல், ஒரு தொழில்துறை நகரத்தையும் பெறமுடியவில்லை.

2005 முதல் பிகார் சிறப்பு அந்தஸ்தைக் கோருவதற்கான காரணம் இதுதான். ஆனால் பிகார் வாக்குறுதிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை.

2015 பிகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, பிகாரிற்கு ரூ .1.25 லட்சம் கோடி பொருளாதாரப் திட்டங்களை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் அது ஒரு தேர்தல் வாக்குறுதியாக மாறியது” என்றார்.

பிகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நாளையும் (அக்.28), அடுத்த கட்ட தேர்தல்கள் நவ.3 மற்றும் 7ஆம் தேதிகளில் நடக்கின்றன. 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடும் குற்றவாளிகள்: பிகார் தேர்தல் உணர்த்துவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details