உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு அதிகமான ஆர்.எஸ்.எஸ் கிளைகள் (ஷாகாக்கள்) உள்ள இரண்டாவது மாநிலமாக கேரளா உள்ளது. உ.பி.யில் தற்போது பாஜக ஆட்சி நடத்திவரும் நிலையில், கேரள தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 2016ல் அவர்கள் கட்சி ஒரு தொகுதியை வென்றதற்கு பாஜக திருப்தி அடைந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டுவரை கேரளாவில் பரவலாக இருந்த 5,000க்கும் மேற்பட்ட ஷாகாக்கள், பாஜகவுக்கான வாக்குகளாக மாற்றவோ அல்லது காங்கிரஸ் அல்லது CPMன் வாக்கு வங்கிகளை ஊடுருவவோ அவர்களுக்கு உதவவில்லை.
1980ல் தொடக்கத்திலிருந்து, விடாமுயற்சி ஒன்றே ஒரு தீவிர அரசியல் சூழலில் நிலைத்திருப்பதற்கான தீர்வு என்பது பாஜக பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட பாடம். பாரதிய ஜனசங்கம் மற்றும் ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுடன் பாஜக உருவானபோது, இந்துத்துவா தவிர, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஒரு சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கடினமாக பணியாற்ற முடிந்ததை தொடர்ந்து விடாமுயற்சி என்ற அரசியல் சித்தாந்தத்தை மேற்கொண்டது.
எந்தவொரு பிரிவினை அரசியலுக்கும் எதிராக இருக்கும் ஒரு மாநிலத்தில், நாட்டில் பெரும்பாலான சமூக சீர்திருத்த இயக்கங்கள் உருவாகி, வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஒரு மாநிலத்தில், காவியுடை அணிந்த சாதுக்கள் பிராமண மேலாதிக்கத்தை கண்டித்து, தலித் மேம்பாடு பற்றி பேசிய ஒரு மாநிலத்தில், பாஜக தொடர்ச்சியான போராட்டத்தில் கவனம் செலுத்திய விதம் காரணமாக ஒரு தொண்டர் அமைப்பை வடிவமைக்க உதவியது. தற்போதைய பலத்துடன், அவர்கள் இப்போது 20 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு வலுவான போட்டியை தர முடியும் என்று நம்புகிறார்கள், மேலும் அதில் 5 பேரையாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
கேரளாவில் பாஜகவின் அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, பாஜகவுக்கான ஆதரவு அறிகுறிகள் 2006க்குப் பின்னரே தெளிவாகத் தெரிந்தது. அதுவரை கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் பாஜக சராசரியாக 5,000 முதல் 10,000 வாக்குகளை மட்டுமே பெற்றது. LDF அல்லது UDFக்கு அடுத்து, மிக அதிக வித்தியாசத்தில் அவர்கள் மூன்றாம் நிலையில் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
கேரளா மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சிகளை கைவிடலாம் என்பது கட்சிக்கு மிகவும் சுலபமாக தோன்றலாம். ஆனால் மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமைக்கு வேறு திட்டங்கள் இருந்தன. ஒரு பெரிய பகுதிக்காக தங்கள் போராட்டத்தை மையப்படுத்துவதைவிட சிறிய பகுதிகளுக்காக கடுமையாக போராடுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டனர். அத்தகைய பகுதிகளில் சாதி மற்றும் சமூக வலிமை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, பாஜக முதலில் கேரளாவில், காசர்கோடு மஞ்சேஸ்வரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் ஆகிய இடங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியது.
வரலாற்று ரீதியாக இந்துத்துவ சார்பு சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் கன்னட பிராமணர்களின் கணிசமான மக்கள் தொகை கொண்ட மஞ்சேஸ்வரம், பாஜக கணிசமாக வளர உதவியது. மங்களூரில் உள்ள வர்த்தகர்களிடமிருந்து ஏராளமான நிதி உதவியுடன், காசர்கோடு பகுதியில் ஒரு அரசியல் அமைப்பை நிறுவுவதற்கான காய் நகர்த்தல்களை பாஜக மேற்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பின்னால் ஏராளமான முஸ்லிம்கள் அணி திரண்டு இருக்கும் நிலையில் இந்த கட்சி இன்னும் இந்த தொகுதியை வெல்ல முடியவில்லை. IUML வேட்பாளர்களுக்கு ஆதரவாக CPM தொண்டர்கள் வாக்களித்ததால் மஞ்சேஸ்வரத்தை வெல்ல இயலவில்லை என பாஜக குற்றம் சாட்டியது.
இதேபோல், ஆர்.எஸ்.எஸ் பெரும்பான்மை இந்து வாக்குகளுடன் வலுவான தளத்தைக் கொண்டுள்ள நேமம், கேரளாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியது. முதல் பாஜக மாநிலத் தலைவரான ஓ ராஜகோபால் இந்த தொகுதியில் இருந்து பல முறை தோற்கடிக்கப்பட்ட போதிலும், கட்சி மனம் தளரவில்லை. இறுதியாக அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர் வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரித்த 'தேர்தல் அங்கிள்' என்று சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்ட ஓ. ராஜகோபால், 2016ல் நேமம் தொகுதியை வென்று கேரளாவில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏ ஆனார். அதைப்போலவே, சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை ஆராய்ந்த பின்னர் இந்த முறை 20 தொகுதிகளிலும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, திருச்சூர், காசர்கோடு போன்ற மாவட்டங்களில் எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான போட்டியை தர அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
பாஜக சித்தாந்தம் அதிகம் இல்லாத கேரளாவில் இது ஒருபோதும் எளிதான போராட்டமாக இருக்கவில்லை. எம் பி பரமேஸ்வரன் போன்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளைத் தவிர, கேரளாவின் அறிவுசார் அல்லது அரசியல் இடத்தில் ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக இடம் பிடிக்கவில்லை கேரளாவின் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்து சாதிகளுக்கும் சமூகங்களுக்கும் சம உரிமைகளுக்காக போராடி, நில சீர்திருத்தங்களின் போது, அனைவருக்கும் கோவில் நுழைவதற்கான போராட்டத்தின் போது, இந்துத்துவ சார்பு சித்தாந்தங்கள் பெரும்பாலும் அதற்கு எதிராக இருந்தனர்.
1980ல் பாஜக கேரள பிரிவு அமைக்கப்பட்ட பின்னரும், அதன் அரசியல் இருப்பு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்சை நம்பியே இருந்தது. இஸ்லாமிய தீவிரவாத சித்தாந்தத்தின் வெளிப்படையான தோற்றம் மற்றும் மதப்பிளவு காரணமாக, குறிப்பாக 1990ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர், அரசியல் ரீதியாக நடுநிலை இந்துக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை புகுத்த பாஜகவுக்கு உதவியது, இதனால் அத்தகைய 'கலாச்சார ரீதியான' கேரள மக்களிடையே அதன் செல்வாக்கை பரப்பியது.
நாட்டின் பல மாநிலங்களின் நிலையைப் போலவே, காங்கிரஸ் தாங்கள் ஆட்சி செய்த மாநிலங்களை பாஜகவுக்கு ஒரு தட்டில் வைத்து வழங்கியிருந்ததைப் போலவே, காங்கிரஸ் கட்சி வாக்குகள் குறைவது தான் இப்போது கேரளாவில் பாஜக வளர்ச்சிக்கு உதவுகிறது. கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் சமூகத்துடனும், புலம்பெயர்ந்த கிறிஸ்தவர்களுடனும் வலுவான தொடர்பைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலும் மென்மையான இந்துத்துவாவின் பாதையில் பயணித்தது. எப்போதுமே தங்கள் அரசியல் சித்தாந்தத்தில் 'கலாச்சாரம்' மற்றும் 'தார்மீக விழுமியங்களை' வைத்திருந்து வெறும் பார்வையாளர்களாக இருந்த கட்சி ஆதரவாளர்கள் இப்போது பாஜகவுக்கு மாறுகின்றனர். மிகவும் தீவிரமான, சீர்திருத்த நோக்குடைய, மதங்களுக்கு எதிரான CPM தங்களுக்கு ஒருபோதும் சாத்தியமான மாற்றாக இருக்காது என பெரும்பான்மையான இந்து சார்பு காங்கிரஸ் ஆதரவாளர்கள் நினைப்பதால் அதன் பலனை பாஜக பெறுகிறது.
மத்தியில் பாஜக ஆட்சின் அமைந்து, பல மாநிலங்களில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், காங்கிரஸ் முக்கிய தேசியக் கட்சியாக இருந்த சூழ்நிலைக்கு மாறாக கேரளாவில் தொண்டர்கள் தளத்தை அதிகரிக்க பாஜகவிற்கு உதவுகிறது. டெல்லியில் ஒரு அரசியல் பிரச்சார சிந்தனைக் குழு கேரளாவில் கட்சியின் பிராந்திய திட்டங்களை ஒருங்கிணைக்கவும் கட்டுப்படுத்தவும் தற்போது பணிபுரிந்து வருவதால் பாஜக நிச்சயமாக கேரளாவில் வளர்ந்து வருகிறது. ஒரு அரசியல் கொள்கைகளை பரப்புவதற்கான ஒரு முக்கியமான கருவியாக சமூக ஊடகங்கள் இருப்பதால், ஒரு வலுவான தகவல் தொழில்நுட்பக் குழுவை கொண்ட பாஜகவுக்கு அவர்களின் சிந்தனை மற்றும் அரசியல் குறிக்கோள்களைப் பரப்புவதற்கும் உதவுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தல்களில், LDF மற்றும் UDF தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதன் வேகமான வளர்ச்சி தெரியவந்ததால், வரவிருக்கும் தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் பாஜக முக்கிய கவனம் செலுத்துகிறது
கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் LDF அல்லது UDF உடன் நேரடியாக மோதும் ஒரு சக்தியாக வளர பாஜகவுக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அது உடனடியாக இல்லையென்றாலும் நிச்சயம் நடக்கும்.