காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் அய்யர், அமித் அக்னிஹோத்தாரிக்கு அளித்த பிரத்யேக பேட்டி வருமாறு:-
கேள்வி:சீனியர், ஜூனியர் போட்டி, தலைமை பிரச்னை காங்கிரஸில் தலைதூக்கியுள்ளதாக தெரிகிறதே? காங்கிரஸில் உண்மையான பிரச்னை என்ன?
பதில்: ஆமாம். ஆனால் தலைமை குறித்து பிரச்னை இல்லை. அது தற்செயலானது. மூத்தத் தலைவர்கள் 23 பேரும் காங்கிரஸின் தலைமையை மாற்ற கோரவில்லை. மாறாக கட்சியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை களைய கூறினார்கள்.
இருப்பினும் தலைமைதான் அடிப்படை பிரச்னை என்று அவர்கள் கருதினால் அகில இந்திய காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடட்டும். சோனியா காந்தியை (9400 வாக்குகள்) எதிர்த்து போட்டியிட்ட ஜித்தேந்திர பிரசாத்தின் (94) நிலைமை அவர்களுக்கு வராது என நம்புகிறேன்.
எனினும் உண்மையான பிரச்னை வேறு இடத்தில் உள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் 20 ஆண்டுகள் கழித்து காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. 1990 மண்டல் விவகாரத்தில் சில பிற்படுத்தப்பட்ட குழுவினர் தனிபிரிவாக செயல்பட்டனர். 1992 பாபர் மசூதி வீழ்ச்சிக்கு பின்னரும் ஒரு குழப்பம் ஏற்பட்டது. பெரும்பாலான முஸ்லிம்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.
ஆகவே தலைமைதான் பிரச்னை என்று பார்க்க வேண்டாம். நான் மேற்கூறிய சமூகக் குழுக்கள் மீண்டும் காங்கிரஸிற்கு திரும்ப வேண்டும். அதேபோல் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற சிறிய சிறிய கட்சிகளையும் மீண்டும் காங்கிரஸில் இணைக்க வேண்டும்.
கேள்வி: ஆனாலும் ஒருங்கிணைப்பு ஏன் தேவைப்படுகிறது? காங்கிரஸ் என்ற ஒரு குடைக்குள் பிராந்திய கட்சிகள் ஏன் இணைய வேண்டும்?
பதில்: பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க ஒருங்கிணைப்புதான் சாத்தியமான வழி. ஆகவே பிராந்திய கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என நான் கூறுகின்றேன்.
மேலும் எங்களின் தலைமையின் கீழ் வாருங்கள் என்று கூறினால் அவர்கள் வர வாய்ப்பில்லை. ஆகவே அவர்களுக்கு பொதுவான ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டும்.
பிரதமர் யார் என்பது குறித்து போராட வேண்டிய நேரம் இதுவல்ல. 2024இல் பாஜகவை தோற்கடிக்க கேரள பாணி அரசியலை பின்பற்ற வேண்டும்.
கேள்வி: தொடர்ச்சியான இரண்டு மக்களவை தேர்தல்களிலும் காங்கிரஸால் 10 விழுக்காடு (54) இடங்களை கூட பெற முடியாமல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: நிச்சயமாக இது ஒரு பெரிய சவால். நாங்கள் இதுபோன்ற பெரிய பெரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். எனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. இன்னும் 600 ஆண்டுகள் ஆனாலும் அங்கு இதே நிலைதான்.
மேலும், எந்தக் கிராமமும் காங்கிரசுக்கு திரும்ப விரும்பவில்லை. ஆகவே திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து வருகிறோம். 1991ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 39 தொகுதிகளை வென்றோம். நானும் நாடாளுமன்றம் சென்றேன். பொதுவாக நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரமான நிலை உள்ளது. ஆகவே நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பும்போது அவர்களை அங்கீகரித்து நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கேள்வி: அது ஒரு நீண்ட கால தீர்வு; தற்போது காங்கிரசுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியமா?
பதில்: தற்போதுள்ள நிலையில் தலைமை இவ்வாறு இருப்பதே சிறந்தது. நாங்கள் ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தும் போது, மற்றொரு பிரச்னை இங்கிருந்து வெளியேறுகிறது.
மாற்று தலைவரை கண்டறிவதற்கு ராகுல் காந்தி பல்வேறு வாய்ப்புகளை வழங்கினார். தனது ராஜினாமாவுக்கு பிறகு இரண்டு மாதங்கள் காத்திருந்தார். தனது தாயோ (சோனியா காந்தி), சகோதரியோ (பிரியங்கா காந்தி) தலைமைக்கு வர மாட்டார்கள் எனக் கூறினார். ஆனாலும் காங்கிரஸிற்கு தலைமையேற்க மற்ற தலைவர்கள் முன்வரவில்லை.
மேலும், பாஜகவின் நோக்கம், “காங்கிரஸ் இல்லாத இந்தியா, காந்தி இல்லாத காங்கிரஸ்” ஆகும். எனவே இதில் நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.