தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

மியான்மரில் சிறைவைக்கப்பட்ட ஜனநாயகம்! - மியான்மர்

அண்மையில் நடைபெற்றத் தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைக் காட்டிலும் அதிக வெற்றியை சூகி கட்சி பெற்றது. இதன் தொடர்ச்சியாக சில அரசியல் சட்டத்திருத்தங்களை சூகி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக எழுந்த அச்சம், சந்தேகம் ஆகியவையே, மக்களால் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹேலிங்கை கிளர்ச்சியை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.

மியான்மர்
மியான்மர்

By

Published : Mar 20, 2021, 9:52 AM IST

உலக நாடுகள் கரோனாவுக்கு எதிராகப் போராடிவரும் நிலையில், மியான்மர் ராணுவமானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசுக்கு எதிராக பழைய நடைமுறைப்படி தாக்குதல் நடத்தி உள்ளது. ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

இப்போது அந்த ஆட்சி ஒரு அரசியல் கைதியாக இருக்கிறது. நாட்டின் அதிபர் வின் மைன்ட், அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, நாட்டின் இதரதலைவர்களை ராணுவம் சிறையில் அடைத்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. ஒன்றரை மாதமாகத் தொடரும் போராட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் தோராயமாக 180 பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவத்தின் ஆதரவுகொண்ட ஐக்கிய ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுறும்பட்சத்தில் ரத்தகளரி ஏற்படும் என்று முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்தகைய எச்சரிக்கைகளுக்கு மக்கள் செவிசாய்க்கவில்லை. ஆனால், ஆங் சான் சூகிக்கு மக்கள் பெரும்பான்மையான ஆதரவு அளித்தனர்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலிலும் 2015ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைக் காட்டிலும் அதிக வெற்றியை சூகி கட்சி பெற்றது. இதன் தொடர்ச்சியாக சில அரசியல் சட்டத்திருத்தங்களை சூகி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக எழுந்த அச்சம், சந்தேகம் ஆகியவையே, மக்களால் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மியான்மர் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹேலிங்கை கிளர்ச்சியை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.

வரும் ஜூலை மாதம் 65ஆவது வயதில் ஓய்வுபெற இருக்கும் ரோஹிஹேலிங், தனது தலைமையில் நடைபெற்ற ரோஹிங்கியா எதிர்ப்பு இனப் படுகொலை குறித்தான சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று அச்சம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரது புரட்சி நடவடிக்கை ஒட்டுமொத்த மியான்மரின் தலைவிதியையே மாற்றி இருக்கிறது.

ராணுவத்தின் அதீத நடவடிக்கைகள் காரணமாக மியான்மரின் தெருக்கள் போராட்டக்காரர்களின் ரத்தத்தில் தோய்ந்ததால் சிவப்பு நிறமாக மாறியிருக்கின்றன. அதிகாரத்தில் இருந்தால், தம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் மேஜர் ஜெனரல் ரோஹிஹேலிங் இருந்திருக்கிறார்.

அதன் விளைவாக மியான்மரின் ஜனநாயகத்தில் ஒரு முக்கியமான பின்னடவு ஏற்பட்டுவிட்டது. பாம்பின்தோலை போர்த்திக்கொண்ட ஒரு தவளையின் தோற்றத்தில் ஜனநாயகம் இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டு கழித்தே, பிரிட்டிஷ் பிடியிலிருந்து மியான்மரும் (முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது) சுதந்திரம் பெற்றது. ஆனால் 1962ஆம் ஆண்டு வரை அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்து நடைபெற்றுவந்தது. 1990ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியின்கீழ் நடைபெற்ற தேர்தலில் தேசிய லீக் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றது.

அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல் அதிகாரத்தை மாற்றம் செய்ய முடியாது என்ற கருத்தில் அதிகாரத்தை மாற்ற அந்த நாளைய ராணுவ அமைப்பு மறுத்துவிட்டது. அந்தத் தருணத்தில் இருந்த ராணுவம் ஜனநாயக ஆதரவாளர்கள் அனைவரையும் சிறையில் தள்ளியது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ அதுதான் திரும்பவும் இப்போதும் ராணுவப் புரட்சி நடப்பதற்குத் தூண்டுதலாக ஆகிவிட்டது.

அபகரிக்கும் மனப்பான்மை கொண்ட மியான்மர் ராணுவம், நாட்டில் ஒரு ஆண்டு காலத்துக்கு நீண்டதொரு அவசரகால சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. உரிமம் இன்றி வாக்கி டாக்கி வைத்திருந்ததாக சூகிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர அவர் மீது கரோனா விதிமுறைகளை மீறியதாகவும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது.

அவர் மீது மேலும் சில ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைச் சுற்றிய பிடியை ராணுவம் இறுக்கி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் மியான்மரின் ராணுவ ஆட்சியாளருக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. தென்கொரியா தன் பங்குக்கு, மியான்மருக்கு ஆயுதம் விற்பனை செய்வதை ரத்துசெய்திருக்கிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தோனேசியா தூதரக ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் நிலை ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. சீனா அண்மையில் தமது ராணுவ சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது. சீனர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு இதர நாடுகளில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் நுழைவதற்கான அதிகாரத்தை இந்த திருத்தம் அளிக்கிறது.

இந்தத் தருணத்தில் சீனாவின் இந்த நடவடிக்கை கவனமாக உற்றுநோக்கப்படுகிறது. மியான்மரில் உறுதியற்றத்தன்மையின் பின்னணியில் இந்தியாவின் வடகிழக்கில் எந்தவொரு கிளர்ச்சியும் ஏற்படுவதைத் தடுக்க இந்திய அரசு கழுகுப்பார்வையுடன் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details